சி.எஸ்.கே அணியில் விளையாடியதில் இருந்து என்னோட ஆட்டம் வேற லெவலில் இருக்கு – இங்கிலாந்து வீரர்

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த தொடரை 3 – 1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி 12ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் துவங்குகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

இந்த தொடருக்கான இங்கிலாந்து அணியின் டி20 வீரர்களின் பட்டியலில் இளம் வீரரான சாம் கரண் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடிய இவர் சென்னை அணியின் ரசிகர்களால் “சுட்டிக் குழந்தை” என்று அன்போடு அழைக்கப்படுகிறார். வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான இவர் கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த இந்திய அணிக்கு எதிரான இந்த டி20 தொடருக்கு முன்னர் பேட்டியளித்த அவர் கூறியதாவது : கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கு பின்பு என்னை நான் மேம்படுத்த பட்டவனாக உணர்கிறேன். சிஎஸ்கே அணியில் விளையாடி அது எனக்கு சிறந்த அனுபவத்தை கொடுத்தது.

curran

சிஎஸ்கே அணியில் எனக்கு வெவ்வேறு பொறுப்புகள் கொடுக்கப்பட்டது. தொடக்க வீரராகவும், மூன்றாவது பேட்ஸ்மேனாகவும் நான் களமிறங்கினேன், அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது அதன் காரணமாக எனது திறன் மேம்பட்டதாக நான் உணர்கிறேன். ஐபிஎல் ஒரு அற்புதமான தொடர் அதுவும் இந்த ஆண்டு இந்தியாவில் விளையாட இருப்பது எனக்கு நல்ல அனுபவமாக இருக்கும் என்று கூறினார்.

Curran

மேலும் ஐபிஎல் போட்டிகளை தவிர இந்தியாவில் டி20 உலக கோப்பை தொடரும் நடைபெற இருக்கிறது. அதற்கு தயாராக இந்த தொடர் ஒரு வாய்ப்பாக இருக்கும் என தான் கருதுவதாக சாம் கரன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement