தோனிக்கு முன்னதாக பேட்டிங் செய்ய இறங்கியதால் இதை மட்டுமே நினைத்து ஆடினேன் – சாம் கரண் பேட்டி

Curran-2
- Advertisement -

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டி நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சவுரப் திவாரி 42 ரன்கள் குவித்தார்.

csk-vs-mi

- Advertisement -

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி துவக்கத்தில் வாட்சன் (4), முரளிவிஜய் (1) என அடுத்தடுத்து ஆட்டமிழழந்து வெளியேற 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சி.எஸ்.கே தடுமாறியது. பின்னர் விளையாடிய டூப்ளெஸ்ஸிஸ் மற்றும் ராயுடு ஆகியோரின் அபார ஆட்டத்தால் சிறப்பான ரன்குவிப்பை வழங்கியது. ராயுடு 48 பந்துகளில் 71 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

டுபிளசிஸ் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 44 பந்துகளில் 58 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் போட்டியை வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். இறுதியில் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்களை குவித்து வெற்றிபெற்றது. ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் சிஎஸ்கே ரசிகர்களை சற்றும் ஏமாற்றவில்லை.

Rayudu

இந்த போட்டியின் இறுதி நேரத்தில் வெற்றிக்கு குறிப்பிட்ட அளவு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனிக்கு முன்னதாக களமிறங்கிய சாம் கரண் 6 பந்துகளை சந்தித்து 2 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 18 ரன்களை குவித்து தனது முக்கிய பங்களிப்பை தந்தார். மேலும் போட்டி முடிந்து தோனிக்கு முன்னதாக தான் இறங்கியது குறித்து பேசிய சாம் கரண் கூறுகையில் : இங்கிலாந்து அணியில் விளையாடியபோது பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்ததால் இரண்டு நாட்களுக்கு முன்பே நான் சென்னை அணியுடன் இணைந்தேன்.

curran

அணியில் இணைந்து 2 நாட்களிலேயே வாய்ப்பு கிடைத்தது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. தோனி உண்மையிலேயே ஒரு ஜீனியஸ். அவருக்கு முன்பாக நான் 18-வது ஓவரில் பேட்டிங் செய்ய இறங்கியதால் வந்தவுடன் சிக்ஸ் அடிக்க வேண்டும் அல்லது அவுட் ஆக வேண்டும் என்ற மனநிலையுடன் வந்தேன். இருப்பினும் என்னால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடிந்தது என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement