தோனி கொடுத்த நம்பிக்கை தான் இதற்கெல்லாம் காரணம் – சாம் கரன் வெளிப்படை

இங்கிலாந்து அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான சாம் கரன் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக வெறும் வேகப்பந்து வீச்சாளராக மட்டும் விளையாடி வரும் சாம் கரன் சென்னை அணியில் பவுலராக மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் மிகவும் சிறப்பாக ஐ.பி.எல் தொடரில் விளையாடி வருகிறார்.

curran 1

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் பெற்ற அனுபவங்கள் குறித்தும் தோனியின் தலைமையின் கீழ் தான் விளையாடுவது குறித்து பேசி உள்ள சாம் கரன் கூறுகையில் : தோனி எனக்கு கொடுத்த நம்பிக்கையின் காரணமாகவே தற்போது என்னால் சர்வதேச கிரிக்கெட்டில் சரி, எந்த வகையான கிரிக்கெட்டிலும் சரி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிகிறது.

- Advertisement -

என்னால் ஒரு சிறந்த ஆல்ரவுண்டராக செயல்பட முடியும் என தோனி என்னை நம்ப வைத்தார். அவரின் அந்த அறிவுரை காரணமாகவே தற்போது நான் சிறப்பாக விளையாடி வருகிறேன். மேலும் சென்னை அணியில் எனக்காக வாய்ப்பைக் கொடுத்து அவர் பேட்டிங்கில் ஓபனிங் கூட செய்ய வைத்தார்.

curran

அந்த அளவிற்கு என் திறமை மீது நிறைய நம்பிக்கை வைத்து எனக்குள் இருக்கும் திறமையை எனக்கு காண்பித்தவர் தோனி மேலும் அவரது தலைமையில் நான் விளையாடி வரும் இவ்வேளையில் பல விடயங்களை தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டுள்ளேன்.

- Advertisement -

ஐபிஎல்-க்கு பிறகு என்னுடைய ஆட்டம் வேற லெவலில் மாறியுள்ளது. அதுமட்டுமின்றி சிஎஸ்கே அணியில் உள்ள சீனியர் வீரர்களுடன் விளையாடுவதால் நிறைய அனுபவம் கிடைக்கிறது என்று சாம் கரன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement