அண்ணனோட ஓவர்னு கூட பாக்காம பிரித்தெடுத்த சி.எஸ்.கே அணியின் சுட்டிக்குழந்தை – விவரம் இதோ

sam curran

நேற்று மகேந்திர சிங் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஐபிஎல் போட்டியை டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் விளையாடியது. நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. அதன் பின்னர் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 36 பந்துகளில் 54 ரன்கள் அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சரிவிலிருந்து மீட்டார். 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என வின்டேஜ் ரெய்னா நேற்று காட்சியளித்தார்.

raina

ரெய்னாவுக்கு கைகொடுக்கும் வகையில் மொயின் அலி 36 ரன்கள், ராயுடு 23 ரன்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜா 26 ரன்கள் எடுத்தனர். ஆனால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்த மகேந்திர சிங் தோனி நேற்று டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். தோனி அளித்த ஏமாற்றத்தை இளம் வீரர் சாம் கரன் பூர்த்தி செய்தார். கடைசியாக களமிறங்கிய சாம் 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். நான்கு பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்கள் என நேற்று தனது அதிரடி ஆட்டத்தை ஆடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோரை 180க்கு மேல் உயர்த்த வைத்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் சாம் கரனின் அண்ணன் டாம் கரனாவார். டாம் கரன் இந்த ஆண்டு டெல்லி அணிக்காக விளையாடுபவர். நேற்று நடந்த போட்டியில் டாம் கரன் பந்துவீசும் போது அவனுடைய தம்பி சாம் பேட்டிங் ஆடினார். 17வது ஓவர் வீசிய டாம் கரனின் பந்துகளை சந்தித்த சாம் ஒரு பவுண்டரி மட்டும் தான் அடித்தார். அந்த ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

sam curran 1

ஆனால் அதன் பின்னர் 19வது ஓவரில் டாம் கரன் விசிய பந்துகளை சந்தித்த சாம், இரண்டு சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி என அந்த ஓவரில் சாம் கரன் மட்டுமே 16 ரன்கள் எடுத்தார். இதற்கு ரசிகர்கள் அனைவரும் அண்ணனுக்கு ஒரு இனிய பரிசு தம்பி அளித்திருக்கிறார் என்று நகைச்சுவையாக சமூக வலைதளங்களில் பேசி உள்ளனர்.

- Advertisement -

tom

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இலக்கான 189 ரன்களை டெல்லி அணி 18.4 ஓவரிலேயே சேஸ் செய்து வெற்றி பெற்றது. பிரித்வி ஷா 72 மற்றும் தவன் 85 ரன்கள் குவித்தது டெல்லி அணியை வெற்றிக்கு காரணமாக இருந்தார்கள்.