“பாக்கெட் சைஸ் டைமன்ட்” சி.எஸ்.கே அணிக்கு புதிதாக கிடைத்த பொக்கிஷம் – நேத்து மேட்ச் வின்னர் இவர்தான்

Curran
- Advertisement -

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடப்பு ஆண்டின் முதல் ஐபிஎல் போட்டி நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் இடையே நடந்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பலம் வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்று தொடரை சிறப்பாக ஆரம்பித்துள்ளது.

csk

- Advertisement -

இந்த போட்டியில் சென்னை சிஎஸ்கே அணிக்கு பல வருடமாக விளையாடி வரும் அனுபவ வீரரான டுவைன் பிராவோ காயம் காரணமாக விளையாடவில்லை. அவருக்கு பதிலாக இங்கிலாந்து அணியை சேர்ந்த இளம் ஆல்ரவுண்டர் சாம் கரன் சிஎஸ்கே அணி தனது முதல் போட்டியில் பங்கேற்றார்.

இளம் வீரராக இருந்தாலும் தனது முதிர்ச்சியான சிறப்பான ஆட்டத்தை அவர் இந்த போட்டியில் வெளிப்படுத்தினார். பந்து வீசும்போது 4 ஓவர்களை வீசி 28 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தது மட்டுமின்றி முக்கியமான மும்பை அணியின் துவக்க வீரரான டிகாக்கின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

Curran 1

அதனைத் தொடர்ந்து சென்னை அணி பேட்டிங் செய்யும்போது வெற்றிக்கு தேவையான நெருக்கடியான நேரத்தில் களம் இறங்கிய அவர் 6 பந்துகளை சந்தித்து அதில் ஒரு பவுண்டரி மற்றும் இரண்டு அபார சிக்ஸர்களை விளாசி 18 ரன்களை குவித்து அசத்தினார். அவரின் இந்த ஆல்ரவுண்ட் பர்பாமன்ஸ் அனைவரையும் கவர்ந்தது.

curran

மேலும் வயதான வீரர்களை கொண்ட அணி என்று விமர்சிக்கப்பட்டு வரும் சென்னை அணிக்கு சாம் கரண் வருகை சென்னை அணியின் பலத்தை அதிகரித்துள்ளது என்றே கூறலாம். 22 வயதான இவர் கடந்த வருடம் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக அறிமுகமாகி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அதுமட்டுமின்றி ஒரு அரை சதமும் அடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement