முதல் போட்டியில் ஜீரோ.. 2வது போட்டியில் ஹீரோவாக மாறி வெ.இ அணியை வீழ்த்திய சாம் கரண்

Sam Curran 2
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கி கோப்பையை தக்க வைக்க தவறிய இங்கிலாந்து அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் 2023 உலகக் கோப்பைக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறி வீழ்ச்சியை சந்தித்துள்ள வெஸ்ட் இண்டீஸ் முதல் போட்டியிலே வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

அந்த நிலைமையில் இத்தொடரின் தீர்மானிக்கும் 2வது போட்டி டிசம்பர் 6ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு ஆன்டிகுவா நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 39.4 ஓவரில் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

- Advertisement -

ஜீரோ டூ ஹீரோ:
அந்த அணிக்கு ப்ரெண்டன் கிங் 19, ஹெட்மயர் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக கேப்டன் சாய் ஹோப் 68, செர்பான் ரூத்தர்போர்ட் 63 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஷாம் கரன் மற்றும் லியான் லிவிங்ஸ்டன் தலா 3, ரெஹன் அஹ்மத் மற்றும் கஸ் அட்கின்சன் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதைத்தொடர்ந்து 207 என்ற சுலபமான இலக்கை துரத்திய இங்கிலாந்துக்கு துவக்க வீரர் வில் ஜேக்ஸ் சிறப்பாக விளையாடி 73 (72) ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தார். இருப்பினும் பில் சால்ட் 21, ஜாக் கிராவ்லி 3, பென் டூக்கெட் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனாலும் இலக்கு குறைவாக இருந்ததை பயன்படுத்தி மிடில் ஆர்டரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹரி ப்ரூக் 43* கேப்டன் ஜோஸ் பட்லர் 58* (45) ரன்கள் விளாசி 32.5 ஓவரிலேயே இங்கிலாந்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

அதனால் வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக குடகேஷ் மோட்டி 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அதனால் 1 – 1* (3) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்த இங்கிலாந்தின் வெற்றியில் பந்து வீச்சில் 7 ஓவர்களில் 33 ரன்கள் மட்டும் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றிய சாம் கரண் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதையும் படிங்க: முதல் போட்டியில் ஜீரோ.. 2வது போட்டியில் ஹீரோவாக மாறி வெ.இ அணியை வீழ்த்திய சாம் கரண்

கடந்த போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 98 ரன்களை வழங்கிய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக ரன்களை கொடுத்து மோசமான பவுலிங்கை பதிவு செய்த இங்கிலாந்து வீரராக பரிதாப சாதனை படைத்தார். ஆனால் இந்த போட்டியில் அதற்கு நேர்மாறாக அபாரமாக விளையாடி கம்பேக் கொடுத்த அவர் ஆட்டநாயகன் விருது வென்று ஜீரோவிலிருந்து ஹீரோவாக மாறி இங்கிலாந்தை வெற்றி பெற வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement