என்னதான் அமீரகம் வந்தடைந்தாலும் முதல் போட்டியில் சாம் கரன் விளையாட முடியாது – காரணம் இதுதான்

curran 1
- Advertisement -

இந்தியாவில் துவங்கிய 14-ஆவது ஐபிஎல் தொடரானது வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக பாதியிலேயே ஒத்திவைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த தொடரில் எஞ்சியுள்ள 31 போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கின்றன. இந்த தொடரின் முதல் போட்டி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி துபாய் மைதானத்தில் துவங்குகிறது. இந்த முதலாவது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.

CskvsMi

- Advertisement -

இந்த தொடரில் விளையாடும் வீரர்கள் அனைவரும் ஐக்கிய அரபு அமீரகம் வந்து தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் நேரடியாக போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடலாம். அதே வேளையில் இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான தொடரில் விளையாடிய வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் வந்தாலும் ஆறு நாட்கள் குவாரன்டைனுக்கு பிறகுதான் அணியில் இணைய முடியும்.

அந்த வகையில் ஏற்கனவே இந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் அனைவரும் அமீரகம் வந்து தங்களை தனிமைப்படுத்திக் கொண்ட வேளையில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள சாம் கரன் நேற்றுதான் தாமதமாக ஐக்கிய அரபு அமீரகம் வந்தடைந்தார். இதன் காரணமாக அவர் கட்டாயமாக 6 நாட்கள் குவாரன்டைனில் இருக்க வேண்டும் என்கிற காரணத்தினால் மும்பை அணிக்காக நடைபெற உள்ள முதல் போட்டியை அவர் தவற விடுவது உறுதியாகி உள்ளது.

curran

இந்நிலையில் சாம் கரனின் வருகையை தற்போது சி.எஸ்.கே அணி நிர்வாகமும் புகைப்படம் மூலம் உறுதி செய்துள்ளது. அது தவிர சி.எஸ்.கே அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களான பிராவோ, இம்ரான் தாஹிர் மற்றும் டூபிளெஸ்ஸிஸ் ஆகியோர் கரீபியன் லீக் தொடரில் விளையாடி வருவதால் அவர்கள் அந்த தொடரின் பயோ பபுளில் இருந்து நேரடியாக அமீரகம் பயணிப்பதால் அவர்கள் குவாரன்டைனில் இருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது.

curran 1

ஏற்கனவே சென்னை அணியின் துவக்க வீரரான டூபிளெஸ்ஸிஸ் காயம் காரணமாக இந்த தொடரில் விளையாட முடியாத சூழலில் தற்போது சாம் கரனும் முதல் போட்டியில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement