Chris Gayle : இந்த புகைப்படத்தில் கெயில் உடன் இருக்கும் இந்த சிறுவன் யார் என்று – தெரியுமா ?

Gayle
- Advertisement -

நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மொஹாலியில் நடந்த போட்டியில் பஞ்சாப் அணியும், டெல்லி அணியும் மோதின. இதில் முதலில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது டெல்லி அணி. அதன்படி முதலில் ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்களை குவித்தது. பஞ்சாப் அணி சார்பாக மில்லர் 43 ரன்களை குவித்தார்.

Dc

- Advertisement -

அதனை தொடர்ந்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய டெல்லி அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ரன்களை மட்டுமே குவித்தது. இதனால் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி சார்பாக 2.2 ஓவர்கள் வீசி 11 ரன்களை கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாம் குரான் ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அந்த சிறுவன் வேறு யாருமில்லை. இந்த போட்டியில் கெயிலுக்கு பதிலாக களமிறங்கிய இங்கிலாந்து அணியை சேர்ந்த இளம் வீரரான சாம் குரான் அவரது சிறுவயதில் கெயில் வுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமே இது.

Sam

அன்று கெயிலுடன் நின்று புகைப்படமெடுத்த குரான் இன்று கெயிலுக்கு பதிலாக ஓப்பனிங் ஆடும் அளவிற்கு தனது திறமையினை வளர்த்து இன்று பஞ்சாப் அணிக்காக ஆடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement