சி.எஸ்.கே அணிக்கு சாம் குரானிடம் இருந்து வந்த நற்செய்தி. இந்த வருடம் கலகப்போறார் – விவரம் இதோ

Curran

வரும் 2020 ஆம் ஆண்டு 13 ஆவது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் கடந்த 19 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் அனைத்து அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த ஏலத்தில் கலந்துகொண்டது.

curran

இந்த ஏலத்தில் நான்கு முக்கிய வீரர்களை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. அதில் சென்னை அணியின் முதல் தேர்வு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் ஆல்ரவுண்டர் சாம் கரன். 21 வயதான இவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட கூடியவர். இவரை சென்னை அணி 5.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

இவரை ஏலத்தில் எடுத்ததில் இருந்து இவரின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கிய இந்நிலையில் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சுரியன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் முதலில் பந்து வீசிய இங்கிலாந்து அணி சார்பாக குரான் அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

curran 2

இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தனது சிறந்த பந்து வீச்சை அளிக்கப் போகிறார் என்ற முன்னோட்டத்தை அவர் காண்பித்துள்ளார். மேலும் 21 வயதே ஆன இவர் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்படக் கூடியவர் என்பதால் மிடில் ஆர்டரில் பிராவோவுடன் இணைந்து பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் கலக்குவார் என்பது தெளிவாகியுள்ளது. ஏற்கனவே நான்கு வீரர்களின் தேர்வில் இவர் மட்டுமே சரியான தேர்வு என்று ரசிகர்கள் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த வருட ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு இவர் முக்கிய வீரராக திகழ்வார் என்பதில் ஐயமில்லை.

- Advertisement -