சி.எஸ்.கே அணியிலும் இவரின் தலைமையில் விளையாடுவதற்கும் ஆர்வமாக உள்ளேன்- சாம் கரன் பேட்டி

curran
- Advertisement -

வரும் 2020 ஆம் ஆண்டு 13 ஆவது ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் கடந்த 19 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்த ஏலத்தில் அனைத்து அணிகளின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் தேர்வு செய்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த ஏலத்தில் கலந்துகொண்டது.

Csk

- Advertisement -

இந்த ஏலத்தில் நான்கு முக்கிய வீரர்களை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது. அதில் சென்னை அணியின் முதல் தேர்வு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் ஆல்ரவுண்டர் சாம் கரன். 21 வயதான இவர் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட கூடியவர். இவரை சென்னை அணி 5.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

இந்நிலையில் சென்னை அணியில் தேர்வானது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள சாம் கரன் தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : சென்னை வந்து எனது புதிய வீரர்களை சந்திக்க ஆர்வமாக உள்ளேன். மேலும் முன்னணி வீரரும் சென்னை அணியின் கேப்டனுமான மகேந்திரசிங் தோனி மற்றும் பயிற்சியாளர் பிளம்மிங் ஆகியோரின் ஆலோசனைகளை பெறுவதற்கு நல்ல அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது.

மேலும் தோனியின் தலைமையில் விளையாட ஆர்வமாக உள்ளேன். நிச்சயம் இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பையை கைப்பற்றி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என்றும் சாம் கரன் தெரிவித்தார். இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இங்கிலாந்து அணி வீரர்களின் அதிகபட்ச விலைக்கு வாங்கும் விலை போனது குறிப்பிடத்தக்கது.

Advertisement