எத்தனை பேர் இருந்தாலும் சென்னை அணிக்கு இவர்தான் என்றும் தல. அவருடன் விளையாடும் நேரத்திற்காக காத்திருக்கிறேன் – சாம் கரண் பேட்டி

curran
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் 29ஆம் தேதி பதிமூன்றாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் துவங்க இருந்தது. ஆனால் தற்போது இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏப்ரல் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் அதனை தொடர்ந்தும் அதன் தாக்கம் குறையாத காரணத்தினால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் காலவரையரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நிலையில் இந்த தொடருக்கான பயிற்சியில் சென்னை அணி மார்ச் 2-ஆம் தேதி முதல் ஈடுபட்டு வந்தது.

CskvsMi

- Advertisement -

குறிப்பாக அந்த அணியின் மூத்த வீரர் தோனி, ரெய்னா, ராயுடு, முரளி விஜய் ஆகியோர் சென்னை வந்து பயிற்சி மேற்கொண்டனர். இம்முறை ஐபிஎல் தொடரில் கலக்கும் பட்சத்தில் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பலாம் என்று எதிர்பார்த்திருந்த தோனியின் நினைப்பு தற்போது கவலைக்கிடமாக உள்ளது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஆர்வமாக உள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரரான சாம் கரண் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சென்னை அணி அவரை ஐந்தரை கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இவர் பஞ்சாப் அணிக்காக பந்துவீசி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தற்போது அனுபவம் வாய்ந்த சிஎஸ்கே அணியுடன் அவர் இணைந்து உள்ளதால் அவரும் இந்த தொடரை எதிர்பார்க்கிறார்.

Curran

ஆனால் இந்த தொடரில் தான் விளையாட முடியாதது குறித்து தற்போது வருத்தம் தெரிவித்துள்ள சாம் கரண் கூறுகையில் : இந்த நேரத்தில் அனைவரும் கூடி சென்னையிலிருந்து இருக்கவேண்டும் ஆனால் தற்போது அதைவிட முக்கியமான விஷயங்கள் சென்றுகொண்டிருக்கிறது. சிஎஸ்கே கேப்டன் தோனியுடன் இணைந்து விளையாட அதிக ஆர்வமாக உள்ளேன். இது எனக்கு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை.

- Advertisement -

அதேபோல சிறந்த பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் சென்னை அணியில் உள்ளார். மேலும் கிரிக்கெட் பற்றி மிக நுணுக்கமான அறிவு கொண்ட வீரர்களும் சென்னை அணியில் உள்ளனர். நான் கடந்த சில ஆண்டுகள் அந்த அணியில் விளையாடிய சாம் பில்லிங்ஸ் இடம் கேட்டு தெரிந்துகொண்டேன். ஐபிஎல் தொடர் எப்போது நடந்தாலும் சென்னை அணிக்காக விளையாட அதிக ஆர்வமாக உள்ளேன். அந்த அணியில் எவ்வளவு சிறப்பான வீரர்கள் இருந்தாலும் கேப்டன் தோனியை மிஞ்சுவது கடினம் தான்.

Curran

தோனி உலக கிரிக்கெட்டில் பல விஷயங்களை அவர் சாதித்துள்ளார் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் சிஎஸ்கே அணியின் வாட்ஸ்அப் குழுவில் என்னை இணைத்தனர் அது ஒரு மிகச் சிறந்த நாளாக அமைந்தது. அனைவரும் என்னை அன்போடு வரவேற்றனர். சிஎஸ்கே அணி பயிற்சி மேற்கொண்டபோது நான் இலங்கையில் இருந்தேன். இலங்கை டெஸ்ட் தொடரில் பங்கேற்ற பின் சென்னை செல்வது தான் எனது திட்டம். ஆனால் உடனடியாக எல்லாம் தலை கீழாக மாறிவிட்டது என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement