மனுசனா இவிங்க.. அடித்து நொறுக்கப்பட்ட சுட்டிக்குழந்தை.. 17 வருட மோசமான வரலாற்று சாதனை

Sam Curran
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கியும் தோல்வியை சந்தித்த இங்கிலாந்து அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதில் டிசம்பர் 3ஆம் தேதி ஆன்ட்டிகுவா நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் தோற்கடித்தது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 50 ஓவர்களில் சிறப்பாக விளையாடிய 326 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அலிக் அதனேஷ் 66, ப்ரண்டன் கிங் 35 ரன்கள் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதை மிடில் ஆர்டரில் வீணடிக்காத கேப்டன் சாய் ஹோப் சதமடித்து 109*, ஹெட்மேயர் 32, செபார்ட் 49 ரன்கள் எடுத்து 48.5 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

மோசமான சாதனை:
அதனால் கஸ் அட்கிட்சன் மற்றும் ரீகன் அகமது தலா 2 விக்கெட்கள் எடுத்தும் இங்கிலாந்து தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அந்த வகையில் இப்போட்டியில் இங்கிலாந்து பவுலர்கள் அனைவரும் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் எஞ்சிய பவுலர்கள் 80 ரன்களுக்கு மேல் கொடுக்காத நிலைமையில் இளம் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் சாம் காரன் மட்டும் 9.5 ஓவரில் விக்கெட் எதுவும் எடுக்காமல் 98 ரன்கள் வாரி வழங்கி இங்கிலாந்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

சொல்லப்போனால் இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட போட்டியில் அதிக ரன்கள் வழங்கிய இங்கிலாந்து பவுலர் என்ற மோசமான வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2006ஆம் ஆண்டு லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் ஸ்டீவ் ஹர்மிசன் விக்கெட் எதுவும் எடுக்காமல் 97 ரன்களை வழங்கியதே முந்தைய சாதனையாகும்.

- Advertisement -

அதே போல 2015ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கிறிஸ் ஜோர்டான் 1 விக்கெட் எடுத்து 97 ரன்களையும் வழங்கியதும் முந்தைய சாதனையாக இருந்து வருகிறது. முன்னதாக சென்னை அணியில் சுட்டிக்குழந்தை என்று ரசிகர்கள் பாராட்டும் அளவுக்கு 2020 சீசனில் சிறப்பாக விளையாடிய சாம் கரண் அதன் பின் காயத்தால் வெளியேறினார்.

இதையும் படிங்க: விராட் கோலி மற்றும் குப்தில் சாதனை உடைப்பு.. ஆஸ்திரேலிய அணிக்கெதிராக – ருதுராஜ் கெய்க்வாட் அபாரம்

அதைத் தொடர்ந்து 2022 டி20 உலகக் கோப்பையை இங்கிலாந்து வெல்வதற்கு தொடர் நாயகன் விருது வென்று அசத்திய அவரை பஞ்சாப் பெரிய தொகை கொடுத்து வாங்கியது. ஆனால் 2023 சீசனில் சுமாராக விளையாடியதால் பஞ்சாப் அணியிலும் கழற்றி விடப்பட்டுள்ள அவரை விரைவில் நடைபெறும் 2024 ஐபிஎல் ஏலத்திற்கு முன்பாக “மனுசனா இவங்க” என்று சொல்லும் அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடித்து நொறுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement