வருண் சக்ரவர்த்தி பவுலிங்கை தெருவில் விளையாடும் பசங்க கூட அடிப்பாங்க – சர்ச்சையை கிளப்பிய பாக் வீரர்

varun
- Advertisement -

நடப்பு டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 12-சுற்றின் முதல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது. இந்த போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தங்களது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இந்திய அணியை 151 ரன்களுக்கு சுருட்டியது. அதன் பின்னர் 2-வது இன்னிங்சில் சேசிங் செய்யும் போது ஒரு விக்கெட்டை இழக்காமல் 152 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

pak

- Advertisement -

இந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி சார்பாக நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி பாகிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வருண் சக்கரவர்த்தி 4 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்து ஏமாற்றத்தை கொடுத்தார். பாகிஸ்தான் வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து அவரின் ஓவரில் ரன்களை குவித்தனர்.

கடந்த 3-4 ஆண்டுகளாக இந்திய அணியின் பல்வேறு சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் இந்த உலகக் கோப்பை தொடருக்கான அணியில் ராகுல் சாகர் மற்றும் வருன் சக்ரவர்த்தி ஆகியோர் அணியில் எடுக்கப்பட்டனர். அதிலும் குறிப்பாக வருண் சக்கரவர்த்தி இந்த தொடரில் சிறப்பாக செயல்படுவார் என்று அனைவராலும் கூறப்பட்டது. ஆனால் இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவரை பாகிஸ்தான் அணி பேட்ஸ்மேன்கள் விக்கெட் எடுக்க விடாமல் ரன்களையும் குவித்தனர்.

varun 1

இதன் காரணமாக அவர் மீது இருந்த எதிர்பார்ப்பு குறைந்து தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் வருன் சக்ரவர்த்தி பந்து வீச்சு குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் கூறுகையில் : வருன் சக்ரவர்த்தி சிறப்பான பந்து வீச்சாளராக இருக்கலாம். ஆனால் அவரால் பாகிஸ்தான் அணி வீரர்களை எந்த ஒரு விதத்திலும் தொந்தரவு செய்ய முடியாது. பாகிஸ்தான் நாட்டில் தெருவில் கிரிக்கெட் விளையாடும் சிறுவர்கள் கூட அவரின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொள்வார்கள் என்ற சர்ச்சையான கருத்தினை கூறி அதிர வைத்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : காயமடைந்த ஹார்திக் பாண்டியா அடுத்த போட்டியில் ஆடுவாரா ? – வெளியான தகவல் இதோ

மேலும் அஜந்தா மெண்டிஸ் கூட ஆரம்பத்தில் சிறப்பாக பந்து வீசினார். ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement