30 வயசுக்கு மேல ஆகிடுச்சு. சீக்கிரம் பார்முக்கு வாங்க இந்திய வீரர் குறித்து பேசிய – சல்மான் பட்

Butt
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி அளித்த ஏமாற்றத்திற்கு பிறகு தற்போது மீண்டும் இந்திய மண்ணில் வலுவாக திரும்பியுள்ளது. இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு கோப்பையை கைப்பற்றி இருந்தாலும் இன்னும் மிடில் ஆர்டரில் சறுக்கலை சந்தித்து வருவதாக தெரிகிறது. ஏனெனில் ரோகித் சர்மா முழுநேர கேப்டன் ஆக மாறிய பின்பு அவரது ஆட்டம் சிறப்பாக இருந்து வருகிறது.

ind

- Advertisement -

அதுமட்டுமின்றி கே.எல் ராகுல் அவரது ஆட்டமும் சிறப்பாக இருக்கிறது. இந்த தொடரில் முதல் போட்டியின்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் அடுத்த இரண்டு போட்டிகளில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவரோடு சேர்ந்து ரிஷப் பண்ட்டும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில் சூரியகுமார் யாதவின் ஆட்டம் குறித்து பேசியுள்ள பாகிஸ்தானின் முன்னாள் வீரரான சல்மான் பட் கூறுகையில் : சூர்யகுமார் யாதவ் ஒரு முதிர்ச்சியான பிளேயர். அவர் நிறைய டொமஸ்டிக் கிரிக்கெட் விளையாடி உள்ளார். தற்போது 30 வயதுக்கு மேல் ஆகும் அவர் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம். அவரை இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரது அனுபவத்துடன் ஒப்பிடுவது தவறு.

sky

ஏனெனில் சூர்யகுமார் யாதவை ஒப்பிடும் போது அவர்கள் இருவரும் குறைந்த அனுபவம் கொண்டவர்கள். ஆனால் சூரியகுமார் யாதவ் நல்ல அனுபவமிக்க வீரர். நிச்சயம் அவர் தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் அண்மையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணிக்கு அறிமுகமாகினார்.

- Advertisement -

இதையும் படிங்க : புதிய கேப்டனாக அவரை நியமியுங்கள். அவர்தான் கரெக்ட்டா இருப்பாரு – ஆடம் கில்க்ரிஸ்ட கருத்து

அந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடி இருந்தார். ஆனால் உலக கோப்பை தொடரில் அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருந்ததால் சீக்கிரம் அவர் பார்மிற்கு திரும்ப வேண்டுமென சல்மான் பட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement