புதிய கேப்டனாக அவரை நியமியுங்கள். அவர்தான் கரெக்ட்டா இருப்பாரு – ஆடம் கில்க்ரிஸ்ட கருத்து

Gilchrist
- Advertisement -

2018-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரம் காரணமாக அப்போதைய கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை விதிக்கப்பட்டனர். அதன் பின்பு டெஸ்ட் அணியின் கேப்டனாக டிம் பெய்ன் கேப்டனாக செயல்பட்டு வந்தார். அவரது தலைமையில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக விளையாடி வந்த ஆஸ்திரேலிய அணி அடுத்ததாக டிசம்பர் மாதம் நடைபெற இருந்த ஆஷஸ் தொடரில் பங்கேற்க இருந்தது.

Paine

- Advertisement -

இந்நிலையில் சக பெண் ஊழியர் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கான காட்சிகள் தற்போது வெளியாகி புகைச்சலை ஏற்படுத்தியுள்ளதால் தான் இனியும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருக்க தகுதி இல்லை என்று கூறி தானாக முன்வந்து கேப்டன் பதவியில் இருந்து டிம் பெயின் விலகியுள்ளார்.

இதன் காரணமாக அடுத்த மாதம் துவங்க இருக்கும் ஆஷஸ் தொடருக்கு புதிய கேப்டனை ஆஸ்திரேலிய அணி நியமிக்க உள்ளது. அந்த வரிசையில் புதிய கேப்டனுக்கான போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுஷேன் ஆகிய இருவர் உள்ளனர்.

அவர்களை தவிர்த்து முன்னாள் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித்தும் இந்த போட்டியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம் ? என்பது குறித்துப் பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் கூறுகையில் : என்னை பொறுத்தவரை பேட் கம்மின்ஸ் தான் கேப்டன் போட்டியில் முன்னிலை வகிக்கிறார். அவருக்கு அந்தப் பதவியை கொடுப்பதில் எந்த வித பிரச்சினையும் கிடையாது.

- Advertisement -

இதையும் படிங்க : சன் ரைசர்ஸ் அணி அவரைத்தான் கண்டிப்பா தக்கவைக்கும். அவருக்கு சப்போர்ட் பண்ணுங்க – வார்னர் நெகிழ்வு

ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர் என்பதற்காக அவரை கேப்டனாகநியமிக்க வேண்டாம் என்று யாரும் நினைக்க கூடாது. அவர் மீது அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு நல்ல மரியாதை இருக்கிறது. நிச்சயம் கேப்டன் அவர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார் என்று கில்க்ரிஸ்ட தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement