இந்திய வீரர்கள் தொடர் தோல்வியை சந்திக்க இதுவே காரணம் – முன்னாள் பாக் வீரர் சல்மான் பட் விளாசல்

Butt
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி சிறப்பாக மேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது.

INDvsAUS

- Advertisement -

இந்திய அணி சார்பாக துவக்க வீரர் கே.எல் ராகுல் 55 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 46 ரன்களையும், ஹார்டிக் பாண்டியா 71 ரன்களையும் குவித்தனர். பின்னர் 209 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 19.2 போர்களில் 6 விக்கெட் இழந்து 211 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் ஆசிய கோப்பையில் தொடர் தோல்விகளை சந்தித்த இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராகவும் தோல்வியை சந்தித்துள்ளதால் இந்திய அணி மீது கடும் விமர்சனம் ஏற்பட்டுள்ளது.

Rohit Sharma Dinesh Karthik Umesh Yadav

இது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான சல்மான் பட் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : உலகிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் வீரர்கள் என்றால் அது இந்திய வீரர்கள் தான். அதிக போட்டிகளில் அவர்கள் விளையாடுகிறார்கள்.

- Advertisement -

ஆனாலும் இந்திய அணியில் தற்போது உள்ள வீரர்கள் அதிக உடல் எடையுடன் இருக்கின்றனர். அப்படி கூடுதல் எடையுடன் இருப்பதால் தான் இந்திய அணியின் வீரர்கள் தொடர் தோல்விகளை சந்திக்கின்றனர் என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஜடேஜா, பாண்டியா, கோலி ஆகியோர் இந்திய அணியில் மிகவும் பிட்டான உடற்தகுதியுடன் இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : IND vs AUS : டிகே’விடம் ரோஹித் சர்மா கோபத்துடன் நடந்துகொண்டது ஏன்? உண்மை பின்னணியை விளக்கும் முன்னாள் வீரர்

அதே வேளையில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் உடல் எடை கூடி இருக்கிறார்கள், அதனால் தான் இந்திய அணி தொடர் தோல்விகளை சந்திக்கிறது என்றும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement