அஷ்வினுக்கு எதிராக நடந்த அநியாயம், கோலியும் ரவி சாஸ்திரியும் பதில் சொல்லியே ஆகனும் – சல்மான் பட்

Butt-1
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது நடைபெற்று முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 14 விக்கெட்டுகளை கைப்பற்றிய தமிழக வீரர் அஷ்வின் தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி இந்த தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய அஷ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்பஜன்சிங் சாதனையை தகர்த்தார். அதுமட்டுமின்றி தற்போது 81 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 427 விக்கெட்டுகளை கைப்பற்றி ஏகப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார்.

ashwin 1

இந்நிலையில் இந்திய மண்ணில் சிறப்பாக பந்து வீசும் அஷ்வினுக்கு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்த ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கலந்துகொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. கடைசி போட்டி கொரோனா அச்சம் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த தொடரில் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றியும், ஒரு போட்டியில் டிராவும், ஒரு போட்டியில் தோல்வியையும் சந்தித்தது. ஆனால் இந்திய அணி விளையாடிய இந்த நான்கு போட்டிகளிலுமே அஷ்வின் அணியில் சேர்க்கப்படவில்லை. நியூசிலாந்து தொடரில் தற்போது சிறப்பாக பந்து வீசியுள்ள அஷ்வினுக்கு ஏன் அந்த தொடரில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை ? என்று தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் கேள்வி எழுப்பியுள்ளார்.

Shastri

இதுகுறித்து அவர் கூறுகையில் : அஷ்வின் போன்ற மேட்ச் வின்னரை இங்கிலாந்து தொடரில் விளையாட வைக்காதது ஏன் என்று என்னால் நம்பமுடியவில்லை. அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர். அவருக்கு இங்கிலாந்து தொடரில் விளையாட வாய்ப்பு கொடுக்காதது ஏன் என்று அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் விராட் கோலி ஆகியோர் நிச்சயம் பதில் அளித்தே ஆகவேண்டும்.

- Advertisement -

இதையும் படிங்க : தெ.ஆ தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு – ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன்சியில் மாற்றம்

தற்போது மீண்டும் அணியில் இணைந்து விளையாடி வரும் அஷ்வின் இவ்வளவு சிறப்பாக ஆடுகையில் இங்கிலாந்து தொடரில் ஏன் வாய்ப்பு மறுக்கப்பட்டது ? என அவர் ஆவேசமாக கேள்வியை எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement