தெ.ஆ தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு – ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டன்சியில் மாற்றம்

Dekock
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3 க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரையும் 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 4 போட்டிகளில் விளையாட திட்டமிடப்பட்டிருந்தது.

IND

- Advertisement -

ஆனால் தென் ஆப்பிரிக்க நாட்டில் பரவி வரும் ஓமைக்ரான் வைரஸ் காரணமாக தற்போது இந்த அட்டவணையில் மாறுதல் ஏற்பட்டுள்ளது. அதன்படி நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடர் இப்போதைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் மூன்று டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மட்டும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே நடைபெற இருந்த தேதியிலிருந்து சற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 26 ஆம் தேதி இந்த டெஸ்ட் தொடரானது நடைபெற உள்ள நிலையில் இந்த தென்னாபிரிக்க தொடருக்கான இந்திய வீரர்களின் தேர்வு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், முகமது ஷமி, கே.எல்.ராகுல், பும்ரா ஆகியோர் அணிக்கு திரும்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

rohith

மேலும் இந்த தொடருக்கான இந்திய அணியில் கேப்டன்சியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோகித் சர்மா நியமிக்கப்படலாம் என்று ஒரு உறுதி செய்யப்படாத தகவல் வெளியாகி உள்ளது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரஹானே அணியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரோஹித்துக்கு டெஸ்ட் துணைக்கேப்டன் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : முன்னாடியும் சொன்ன. இப்போவும் சொல்றேன் பெஸ்ட் கேப்டன்னா அது இவர்தான் – இர்பான் பதான் ட்வீட்

அதுமட்டுமின்றி டெஸ்ட் தொடருக்கான வீரர்களின் பட்டியலில் இசாந்த் சர்மா வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக சிராஜுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அதோடு சேர்ந்து நியூசிலாந்து டெஸ்ட் சிறப்பாக விளையாடிய மாயங்க் அகர்வால், ஷ்ரேயாஸ் ஐயர், சுப்மன் கில் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement