இப்போ மட்டும் ஜெயிச்சுட்டீங்களே? விராட் கோலிக்கு செய்த அவமானத்திற்கு இது வேணும் – பிசிசிஐயை விளாசும் சல்மான் பட்

Butt-1
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் வழக்கம் போல இந்தியா அணி வெறும் கையுடன் வெளியேறியது. இத்தொடரில் விராட் கோலி, சூரியகுமார் போன்ற ஒரு சிலரை தவிர்த்து கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான சீனியர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அதனால் கடுப்பாகியுள்ள பிசிசிஐ அடுத்த உலக கோப்பைக்கு முன்பாக இளம் வீரர்களைக் கொண்ட புதிய அணியை உருவாக்குவதற்காக முதலில் சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை கூண்டோடு நீக்கியுள்ளது.

BCCI-and-Rohit

- Advertisement -

அதை விட ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும் மற்றும் கேப்டனாகவும் சுமாராக செயல்பட்ட ரோகித் சர்மா 35 வயதை கடந்து விட்டதால் டி20 கிரிக்கெட்டில் பாண்டியா போன்ற வெவ்வேறு வகையான கிரிக்கெட்டுக்கு வெவ்வேறு கேப்டன்களை நியமிக்கும் முடிவையும் பிசிசிஐ பரிசீலித்து வருகிறது. முன்னதாக கடந்த 2017 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி இருதரப்பு தொடர்களில் அசத்திய போதிலும் உலக கோப்பையை வென்று தரவில்லை என்பதற்காக சந்தித்த விமர்சனங்களால் டி20 உலக கோப்பையுடன் டி20 கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்தார்.

உங்களுக்கு வேணும்:

அதை பயன்படுத்திய பிசிசிஐ அவரது ஒருநாள் கேப்டன்ஷிப் பதவியை வலுக்கட்டாயமாக பறித்து ரோகித் சர்மாவிடம் ஒப்படைத்தது. அதனால் மனமுடைந்த அவர் பணிச்சுமை என்பதை காரணமாக காட்டி டெஸ்ட் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்தார். அப்போது பொறுபேற்ற ரோஹித் சர்மா வழக்கம் போல இருதரப்பு தொடர்களை வென்றாலும் அழுத்தமான ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை. அதை விட கேப்டனாக பொறுப்பேற்ற ஒரு வருடத்திற்குள் பெரும்பாலும் ஓய்வெடுத்த அவரால் வரலாற்றிலேயே முதல் முறையாக 7 வெவ்வேறு கேப்டன்களை பயன்படுத்த வேண்டிய அவலம் இந்தியாவுக்கு ஏற்பட்டது.

rohith

அதனால் அதற்கு விராட் கோலியே பரவாயில்லை என்று பேசும் ரசிகர்கள் அவருக்கு செய்த அவமானத்திற்கு இந்த நிலைமை பிசிசிஐக்கு தேவை தான் என்று சாடி வருகிறார்கள். இந்நிலையில் ஃபிட்னெஸ்க்கு எடுத்துக்காட்டாக தொடர்ந்து அசத்தலாக செயல்பட்டு வந்த விராட் கோலியை நீக்கிய உங்களால் தற்போது கோப்பையை வெல்ல முடிந்ததா? என்று முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சல்மான் பட் விமர்சித்துள்ளார். 3 வகையான கிரிக்கெட்டுக்கும் வெவ்வேறு கேப்டன் என்ற முடிவை நோக்கி செல்லும் பிசிசிஐ பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் விமர்சித்தது பின்வருமாறு.

- Advertisement -

“விராட் கோலியை தகுந்த காரணங்கள் இல்லாமலேயே அவர்கள் அதிரடியாக கேப்டன் பதிவியிலிருந்து நீக்கினார்கள். இருப்பினும் ஐசிசி கோப்பையை வென்று தரவில்லை என்பதே அதற்கான காரணமாகும். சொல்லப்போனால் வரலாற்றில் எத்தனை கேப்டன்கள் ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளார்கள்? உலகில் நிறைய கேப்டன்கள் தங்களுடைய கேரியர் முழுவதும் அந்தக் கோப்பையை வெல்லாமலேயே ஓய்வு பெற்றார்கள். இருப்பினும் அதிரடியாக விராட் கோலியை நீக்கிய நீங்கள் தற்போது கோப்பையை வென்று விட்டீர்களா? என்னைப் பொறுத்த வரை அவர் தரமான கேப்டன்”

Butt

“மேலும் அவரது தலைமையில் இந்தியா தோற்றதற்கு அவர் மட்டும் காரணமல்ல. அத்துடன் கேப்டனாக அவர் விலகிய பின் தற்போது இந்திய அணி பெரிய அளவில் முன்னேறியாதாகவும் தெரியவில்லை. மேலும் கோப்பையை மட்டும் வெல்வதே உங்களது இலக்கு என்றால் தோனியால் கூட அனைத்து டி20 போட்டிகளிலும் வெல்ல முடியாது. அத்துடன் டி20 உலகக்கோப்பையை உங்களால் எப்படி அடிக்கடி வெல்ல முடியும்? ஏனெனில் இந்த ஃபார்மட் மிகவும் நிலையற்றது. அது போக இந்த வகையான கிரிக்கெட்டில் உலகக்கோப்பையும் பல்வேறு டி20 தொடர்களும் அடிக்கடி நடக்கின்றன”

- Advertisement -

“அந்த நிலைமையில் உங்களிடம் நல்ல ஃபிட்னெஸ் மற்றும் நுணுக்கங்கள் தெரிந்த ஒருவர் இருந்தால் ஏன் அவர் உங்களது அணியை வழிநடத்தக் கூடாது? இளம் கேப்டனை வளர்ப்பது பெரிய வகையான கிரிக்கெட்டிலும் நடைபெறும்” என்று கூறினார். அதாவது ஐசிசி உலக கோப்பைகளை எந்த அணியாலும் அடிக்கடி வெல்ல முடியாது என்று தெரிவிக்கும் அவர் இதர வீரர்கள் சொதப்பும் போது கேப்டன் மட்டும் எப்படி தோல்விக்கு பொறுப்பாக முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படிங்க : IND vs NZ : நீங்க ஆடுனவரை போதும் தமிழக வீரரை வெளியேற்றிய கேப்டன் பாண்டியா – பிளேயிங் லெவன் இதோ

ஆனால் மொத்த பழியையும் விராட் கோலி மீது போட்டு அதிரடியாக நீக்கிய இந்திய அணிக்கு தற்சமயத்தில் அவரைப் போன்ற ஃபிட்னஸ் கொண்ட வேறு தரமான கேப்டன் கிடைக்க மாட்டார் என்றும் சல்மான் பட் வெளிப்படையாக பேசியுள்ளார்.

Advertisement