ரோஹித்துக்கும் இப்படித்தான் சொன்னாங்க – ஹர்டிக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்கும் இந்தியாவை எச்சரிக்கும் சல்மான் பட்

Rohit Sharma Salman Butt
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்ற முடிந்த வரலாற்றின் 8வது டி20 உலக கோப்பையில் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுடன் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக களமிறங்கிய இந்தியா வழக்கம் போல லீக் சுற்றில் அசத்தினாலும் நாக் அவுட் சுற்றில் படுதோல்வியை சந்தித்து வெறும் கையுடன் வெளியேறியது. அந்தத் தொடரில் விராட் கோலி போன்ற ஒரு சிலரை தவிர்த்து பெரும்பாலான சீனியர் கிரிக்கெட் வீரர்கள் சுமாராக செயல்பட்டதால தோல்வி பரிசாக கிடைத்தது. அதன் காரணமாக காலம் கடந்த வீரர்களை கழற்றி விட்டு 2024 டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதுமையான அணியை உருவாக்குமாறு முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Rohit Sharma IND

- Advertisement -

குறிப்பாக கேப்டனாக முன்னின்று ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அதிரடி காட்ட வேண்டிய ரோஹித் சர்மா இந்த தொடரில் பெரும்பாலான போட்டிகளில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஒரு காலத்தில் ஹிட்மேன் என்று ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு எதிரணிகளைப் பந்தாடிய அவர் சமீப காலங்களில் குறிப்பாக கேப்டன்ஷிப் பதவியேற்ற பின் பேட்டிங்கில் ரன்களை குவிக்க திணறுகிறார். மேலும் சாதாரண இருதரப்பு தொடர்களில் வெற்றிகளை பதிவு செய்த அவர் இந்த வருடம் நடைபெற்ற ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய 2 முக்கிய தொடர்களிலும் கோப்பை வெல்ல முடியாமல் சுமாராக செயல்பட்டார்.

யோசிச்சு முடிவெடுங்க:

அத்துடன் ஏற்கனவே 35 வயதை கடந்து விட்ட காரணத்தால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு பதில் 2022 ஐபிஎல் கோப்பையை வென்று துடிதுடிப்பான ஆல்-ரவுண்டராக திகழும் ஹர்திக் பாண்டியாவை குறைந்தபட்சம் டி20 கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. சொல்லப்போனால் ஏற்கனவே நடைபெற்று வரும் நியூசிலாந்து தொடரில் கேப்டனாக பாண்டியா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழுவை அதிரடியாக நீக்கியுள்ள பிசிசிஐ விரைவில் அவரை நிரந்தரமாக நியமிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் விராட் கோலி தலைமையில் இதே போல் வெற்றியை பதிவு செய்த தவறிய போது 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றார் என்ற காரணத்தால் ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் தெரிவித்துள்ளார். எனவே ஒரு தோல்வியை வைத்து அனுபவம் வாய்ந்த ரோகித் சர்மாவை குறைத்து மதிப்பிட்டு இந்திய கிரிக்கெட்டை குலைக்கும் முடிவை பிசிசிஐ எடுக்க தயாராகியுள்ளதாக அதிருப்தி தெரிவித்துள்ள அவர் இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பாண்டியாவை கேப்டனாக யார் பார்க்கிறார்கள்? 2024 உலகக்கோப்பை கனவுகளை யார் பார்க்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. பாண்டியா திறமையானவர் ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ரோகித் சர்மா அவரை காட்டிலும் ஐபிஎல் தொடரில் 5 முதல் 6 மடங்கு வெற்றிகரமாக இருந்துள்ளார். மேலும் இந்த டி20 உலக கோப்பையில் அவர் ஒரு சில போட்டிகளில் பெரிய ரன்களை குவித்திருந்தால் அனைவரும் இப்படி அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்குவது பற்றி பேசியிருக்க மாட்டார்கள்”

Butt

“அத்துடன்ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நாடுகளில் இது போன்ற தோல்விகளை சந்திக்கும் போது அனைவரும் உடனடியாக பெரிய மாற்றங்கள் நிகழ வேண்டும் என்று பேச ஆரம்பித்து விடுவார்கள். இருப்பினும் எல்லோரும் அப்படி பேசுவது கிடையாது. ஆனால் சில முன்னாள் வீரர்கள் இந்த மாற்றங்கள் எப்படி வேலை செய்யும் என்பதை பற்றி புரிந்து கொள்ளாமலேயே பேசுவார்கள். சில நேரங்களில் தோல்வி வந்ததுமே அனைவரும் கேப்டனை மாற்றுங்கள் என்று சொல்வார்கள். ஆனால் இந்த உலகக் கோப்பையில் ஒரு கேப்டன் மட்டுமே கோப்பை வென்றுள்ளார்”

“இதர கேப்டன்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். அப்படியானால் இந்த உலகக் கோப்பையில் தோல்வியை சந்தித்த 11 அணிகளும் கேப்டன்களை மாற்ற வேண்டுமா?” என்று கூறினார். இருப்பினும் தற்போது 35 வயதை கடந்துள்ள ரோஹித் சர்மா அடுத்த உலக கோப்பையின் போது 37 வயதை தாண்டி விடுவார் என்பதாலேயே வருங்காலத்தை சிந்தித்து புதிய கேப்டனை நியமிக்க அனைவரும் கோரிக்கை வைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement