விராட் கோலியை பத்தி பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்ல. மைக்கல் வாகனுடன் மல்லுக்கட்டிய பாக் வீரர் – விவரம் இதோ

Salman-butt

கடந்த சில நாட்களாகவே இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்திய அணியின் கேப்டனான விராத் கோலி குறித்து தொடர்ந்து சில விமர்சனங்களை, சர்ச்சையான கருத்துக்களை முன்வைத்து வருகிறார். அதுகுறித்து இந்திய ரசிகர்கள் பலரும் வாகனுக்கு தக்க பதிலடியை சமூக வலைதளம் மூலம் அளித்து வருகின்றனர். ஏற்கனவே வாகன் வெளியிட்டிருந்த ஒரு பதிவில் விராட் கோலியை விட கேன் வில்லியம்சன் தான் சிறந்த வீரர் என்று ஒரு கருத்தினை பதிவிட்டுருந்தார்.

vaughan

மேலும் வில்லியம்சன் மட்டும் இந்தியாவில் பிறந்திருந்தால் கோலியை விடப் புகழ் பெற்று இருப்பார் என்றும் தனது கருத்தினை முன்வைத்திருந்தார். இந்நிலையில் இப்படி கோலி குறித்து பதிவிடப்பட்ட குறிப்பிட்ட அந்த பதிவிற்கு பதில் அளித்த முன்னாள் பாகிஸ்தான் வீரரான சல்மான் பட் சமூகவலைதளத்தில் அவருடன் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பதில் அளிக்கையில் : கோலி மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் இருந்து இவ்வளவு தூரம் விளையாடி வருவது மிகவும் சிறப்பான ஒன்று. மேலும் அவர் 70 சதங்களை சர்வதேச கிரிக்கெட்டில் விளாசியுள்ளார். இப்போது இருக்கும் கிரிக்கெட்டில் அவருக்கு நிகரான சதங்களை விளாசிய வீரர் யாரும் இல்லை.

kohli 1

நீங்களும் சர்வதேச கிரிக்கெட்டில் பல ஆண்டுகள் விளையாடி இருக்கிறீர்கள். கேப்டனாகவும் செயல்பட்டு இருக்கிறீர்கள் ஆனால் உங்களால் ஒரு போட்டியில் கூட ஒருநாள் சதத்தை அடிக்க முடிந்ததில்லை. அதனால் நீங்கள் கோலியைப் பற்றி இவ்வாறு பேசக் கூடாது என சல்மான் பட் தனது கருத்தினை வாகனுக்கு எதிராக பதிவிட்டுள்ளார் .

- Advertisement -

kohli

இதனால் தற்போது அவர்களுக்குள்ளே பெரிய கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சல்மான் பட் கூறியது போலவே மைக்கேல் வாகன் 82 போட்டிகளில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 18 சதங்களை அடித்துள்ளாரே தவிர ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் ஒரு சதம் கூட விளாசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement