டி20 உலககோப்பை வெளியேற்றம்.. பாகிஸ்தான் கேப்டனுக்கு ஏற்படப்போகும் ஏமாற்றம் – விவரம் இதோ

Salman Agha
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன. அதன் பின்னர் தற்போது சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

பாகிஸ்தான் கேப்டனுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு :

இவ்வேளையில் அரையிறுதிக்கு செல்லப்போகும் நான்கு அணிகள் எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது. ஏற்கனவே இந்த தொடருக்கான அரையிறுதி வாய்ப்பினை தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் உறுதிசெய்து விட்டன.

- Advertisement -

இவ்வேளையில் இன்றைய இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி முடிந்த பின்னர் நான்காவது அணி எது? என்று தெரிந்துவிடும். இந்நிலையில் இந்த தொடரின் போது சல்மான் அலி ஆகா தலைமையில் களமிறங்கி விளையாடிய பாகிஸ்தான் அணி லீக் சுற்று போட்டிகளில் சிறப்பாக விளையாடி சூப்பர் வந்தாலும் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இந்த தொடரில் இருந்து வெளியேறியது.

நேற்று நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை இழந்தனர். இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி வாய்ப்பை பாகிஸ்தான் அணி இழந்ததால் கேப்டன் சல்மான் அலி ஆகா பதவி நீக்கம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலியின் மாபெரும் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர் பர்ஹான் – விவரம் இதோ

மேலும் இந்த தொடரில் மோசமாக செயல்பட்ட சீனியர் வீரர்கள் பலரும் வெளியேற்றப்பட்டு அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்கள் அணிக்குள் கொண்டு வரப்படலாம் என்றும் நிச்சயம் ஒரு இளம் வீரரே புதிய பாகிஸ்தான் கேப்டனாக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement