- Advertisement -
இந்திய கிரிக்கெட்

தோனிக்கு பைக் என்றால் அலாதி பிரியம். அதும் இந்த பைக் மேல அவருக்கு பைத்தியம் – சாக்ஷி தோனி பகிர்ந்த தகவல்

தோனி தனது இளமைக் காலம் முதலேயே ஒரு பைக் பிரியர் ஆக இருந்து வந்துள்ளார். தான் முதன்முதலில் சம்பாதித்த பணத்தில் அப்போது பிரபலமாக இருந்த ஆர்எக்ஸ்-100 பைக் வாங்கியது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் போட்டிகளில் தான் பரிசாக பெறும் பைக்குகளையும் தோனி மைதானத்திலேயே ஓட்டுவதையும் நாம் பார்த்துள்ளோம்.

கல்லூரி காலத்திலிருந்தே பைக்குகள் மீது தீராத காதல் மோகத்துடன் இருந்தவர். தான் கோடி கோடியாய் சம்பாதிக்க ஆரம்பித்த உடன் தனது பண்ணை வீட்டில் 5000 சதுர அடி கொண்ட ஒரு மிகப்பெரிய பைக் கேரேஜ் உருவாக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அண்மையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசிய டோணியின் மனைவி சாக்ஷி தனது கணவரின் பைக் ஆர்வத்தை பற்றி பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் …

- Advertisement -

தற்போது எனது கணவரிடம் 9 பைக்குகள் உள்ளன. ஒவ்வொரு பைக்கையும் உதிரி பாகங்களை வாங்கி வந்து அவரே வடிவமைத்தார். ஒரு சில நேரங்களில் ஏதாவது ஒரு பொருள் அல்லது பாகத்தை மாற்றி பொருத்தி விடுவார். இதனால் அதனைமீண்டும் அனைத்து பாகங்களையும் கழற்றி போட்டுவிட்டு முதலிருந்து வடிவமைப்பாளர்.

அவரிடம் லட்சங்களில் விற்கும் பல வகைகள் இருந்தாலும் அவருக்கு பிடித்தமான பைக்குகள் Kawasaki Ninja H2 , the Confederate X132 Hellcat இவை இரண்டும்தான் என்று கூறியுள்ளார் சாக்ஷி சிங்.
இந்த பைக்கை 2015ஆம் ஆண்டு Ninja H2 வெளிவந்தபோது இந்தியாவில் முதன்முதலாக வாங்கி தோனி பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் இது போன்ற பல ரகங்களில் பைக்குகளை தனது மிகப்பெரிய கேரெஜில் தோனி சேமித்து வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது பண்ணை வீட்டில் பைக்குகளுக்கு என தனியே பிரத்யேகமான அறையும் அவர் வைத்து அதில் இருக்கும் பைக்குகளை தானே பழுதுபார்த்து பராமரிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

- Advertisement -
Published by