தோத்தாலும் சி.எஸ்.கே எப்போவுமே கிங்ஸ் தான். சி.எஸ்.கே ரசிகர்களுக்காக உருகிய சாக்ஷி தோனி – வைரலாகும் பதிவு

Sakshi-1

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருடா வருடம் பிளே ஆப் சுற்றுக்கு செல்வது வாடிக்கையான ஒன்றுதான். பதினொரு வருடங்கள் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அனைத்து ஆண்டுகளிலும் பிளே ஆப் சுற்றுக்கு சென்றுள்ளது. எட்டு முறை இறுதிப் போட்டிக்குச் சென்று மூன்று முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

எந்த ஒரு அணியும் இப்படி ஒரு சாதனையை படைத்தது இல்லை. தான் பங்கேற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆப் சுற்றுக்கு சென்றுள்ள ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். ஆனால் இந்த வருடம் அவ்வாறு அமையவில்லை துவக்கம் முதலே நன்றாக செயல்படாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறி இருக்கிறது.

12 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் நீடித்துக் கொண்டிருக்கிறது. சூப்பர் கிங்ஸ் அணி இதனால் இந்த வருடம் இந்த வாய்ப்பை தவற விட்டு விட்டது. இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது.

csk

இந்த படுதோல்வியை தொடர்ந்து சென்னை ரசிகர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் சென்னை அணியின் கேப்டன் தோனியின் மனைவி சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஆறுதல் கவிதை பதிவிட்டுள்ளார் அதில்..

- Advertisement -

இது ஒரு விளையாட்டு, இதில் நாம் வெற்றியும் பெறலாம். பல போட்டிகளில் தோல்வி அடையலாம். யாரும் தோல்வி அடைய விரும்பவில்லை. ஆனால் எப்போதும் எல்லாரும் வெற்றியாளர்களாக இருக்க முடியாது. உண்மையான வீரர்கள் போராடத்தான் வருகிறார்கள். அவர்கள் எப்போதும் நம் மனதில் சூப்பர் கிங்ஸ்களாக இருப்பார்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சாக்சி.