தோனியின் மனைவி சாக்ஷி முத்தமிடும் இந்த நபர் யார் தெரியுமா ? – வைரலாகும் செய்தி

monu sakshi

ஐபிஎல் தொடரின் 44 ஆவது லீக் போட்டியில் நேற்று துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், கோலி தலைமையிலான பெங்களூர் அணியும் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் ரசிகர்களை அனைவரும் கவரும் விதமாக ஒரு மாற்றத்தை தோனி செய்து இருந்தார்.

CSKvsRCB

அந்த மாற்றம் யாரெனில் இளம் வீரரான மோனு குமார் என்கிற 25 வயதான வீரருக்கு அவர் இடம் கொடுத்திருந்தார். ரசிகர்கள் பலரும் அவரை சிஎஸ்கே அணியின் உதவியாளர் என்று நினைத்திருந்த நிலையில் அவர் ஒரு வேகப்பந்து வீச்சாளராக இன்று களமிறங்கி விளையாடினார். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை அணியில் இருக்கும் அவருக்கு 44 போட்டிகளுக்கு பிறகு நேற்றைய போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

அறிமுகப் போட்டியில் விளையாடிய அவர் 2 ஓவர்கள் பந்துவீசி 20 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஒரு நோபால் மற்றும் மூன்று வைடுகளை வீசியிருந்தார். இந்நிலையில் இவர் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதன்படி இவருக்கும் தோனிக்கும் என்ன தொடர்பு என்ற செய்தியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

monu kumar

அதாவது ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி நகரை சேர்ந்த இவர் ஏற்கனவே 2014 ஆம் ஆண்டு அண்டர் 19 உலகக்கோப்பையில் விளையாடி உள்ளார். அந்த தொடரில்தான் சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ், ஹூடா போன்ற பல வீரர்கள் விளையாடி இருக்கின்றனர். அந்த அணியில் இடம்பிடித்து விளையாடியுள்ளார். அதுமட்டுமன்றி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இருந்தே இவர் வந்து இருப்பதால் அவரை அணியில் தோனி தான் ஏலத்தில் எடுத்து இருப்பார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

ஜார்கண்ட் மாநில அணிக்காக போட்டிகளில் 2014 ஆம் ஆண்டு அறிமுகமான இவர் 22 டி20 போட்டி களிலும், 10 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் பலரும் கண்டிராத இவர் ராஞ்சி நகரை சேர்ந்தவர் என்பதாலும் ஜார்கண்ட் அணிக்காக கிரிக்கெட் விளையாடி வருவது வருவதாலும் இவர் சிஎஸ்கே அணியில் தோனியால் தனிப்பட்ட முறையில் தேர்வாகியிருக்கலாம் என்று தகவல்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

monu 1

இந்நிலையில் தற்போது டோனியின் மனைவி ஒரு வீரரின் தலையில் முத்தமிடுவது போன்ற ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் வேறு யாரும் இல்லை நேற்று சி.எஸ்.கே அணிக்காக அறிமுகமாகிய மோனு குமார்தான் ராஞ்சி நகரை சேர்ந்த இவர் ஏற்கனவே தோனியின் குடும்பத்திற்கு நன்கு பழக்கப்பட்டவர் என்பதால் அவருடன் தோனியின் குடும்பத்தாருக்கு நல்ல நட்பு உள்ளது. அது மட்டுமின்றி வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியிலும் அவர் தொடர்ந்து பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.