நாங்க இதுவரைக்கும் ஏதும் செய்யல. செய்ஞ்சாலும் இவ்ளோ கம்மியா பண்ணமாட்டோம் – சாக்சி தோனி கோவம்

- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் தங்களது போராட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது உலகம் முழுவதும் பரவிவரும் இந்த வைரஸ் இந்தியாவிலும் தனது ஆட்டத்தை மெல்லமெல்ல ஆரம்பித்துள்ளது.இதனால் இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு மேற்கொள்ளப்பட்டு மக்கள் வெளியில் வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

corona

இந்தியா முழுவதும் அடுத்த இரண்டு வாரங்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் பலரும் முன்வந்து அரசுக்கு நிதி உதவி அளித்து வருகிறார்கள். மேலும் பல பிரபலங்களும் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு வழங்குவதற்காக அந்தந்த மாநில அரசுகளிடம் கொடுத்து வருகிறார்கள். இந்திய அளவில் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் நிதி உதவியும் பொருள் உதவியும் அளித்து வருகின்றனர்.

- Advertisement -

அந்தவகையில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம், கங்குலி 50 லட்சம் மதிப்பிலான அரிசி மூட்டைகள், பதான் சகோதரர்கள் முகக்கவசம் என அனைவரும் கொரோனா பாதிப்பை எதிர்கொள்வதற்கான நிதிஉதவி அரசுக்கு வழங்கி வருகின்றனர்.

dhoni

இந்நிலையில் நேற்று புனேவில் இருக்கும் முகுல் மாதவ் என்ற அறக்கட்டளை சார்பாக நிதி நிதி திரட்டி கேட்டோ என்ற இணையதளம் மூலம் இந்த நிதி திரட்டல் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ரூபாய் ஒரு லட்சம் நிதியுதவி அளித்ததாக தவறான செய்திகள் பரவின.

- Advertisement -

ஆனால் தோனி ஒரு லட்சம் தான் கொடுத்தாரா ? என்று பலரும் கிண்டல் செய்ய இந்த தவறான செய்தி இணையத்தில் அதிகளவு தீயாக பரவியது. இந்நிலையில் இந்த செய்தி அடுத்தடுத்து இந்தியா முழுவதும் பரவ பலரும் தோனியை கடுமையாக விமர்சித்தனர். 800 கோடி மதிப்புடைய ஒருவர் கொடுக்கும் நிதி உதவி இதுதானா ? என்பது போன்ற விமர்சனங்களும் எழுந்தன. இந்நிலையில் இந்த பொய்யான செய்தி குறித்து தோனியின் மனைவி சாக்ஷி கண்டனம் செய்துள்ளார்.

Sakshi

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் : இது போன்ற முக்கிய நேரங்களில் தவறான செய்திகளை வெளியிடுவதை நிறுத்துமாறு அனைத்து ஊடகங்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன் நீங்களே இப்படி செய்வதா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். மேலும் இந்த பொய்யான செய்தியை பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement