9 மாசம் முடிஞ்சும் ரோஹித் சர்மா மாறவே இல்ல.. தொடர்ந்து இதை செய்வாரு.. பவுலிங் கோச் பாராட்டு

Siraj Bahatule 2
- Advertisement -

இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. ஆனால் அத்தொடரின் முதல் போட்டி சமனில் முடிந்தது. ஆகஸ்ட் இரண்டாம் தேதி கொழும்புவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவரில் 230 ரன்கள் அடித்தது.

அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 58 ரன்கள் குவித்த நல்ல துவக்கத்தை கொடுத்தார். ஆனால் மறுபுறம் விராட் கோலி, கே.எல் ராகுல், அக்சர் பட்டேல், ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினர். அதனால் கடைசியில் சிவம் துபே போராடி அவுட்டான நிலையில் அர்ஷ்தீப் சிங் டக் அவுட்டாகி வெற்றியை கோட்டை விட்டார்.

- Advertisement -

9 மாதம் முடிந்தும்:
அதனால் இந்தியாவிடம் சந்தித்து தொடர் தோல்விகளை நிறுத்திய இலங்கை கொஞ்சம் நிம்மதியடைந்தது. இருப்பினும் அந்தப் போட்டியில் பேட்டிங்க்கு சாவலாக இருந்த பிட்ச்சில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். குறிப்பாக 7 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்க விட்ட அவர் பவர் பிளே முடிவதற்குள் 33 பந்துகளில் அரை சதமடித்து அசத்தினார்.

கடந்த 2023 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தம்முடைய சொந்த சாதனைகளைப் பற்றி கவலைப்படாமல் எதிரணியை அடித்து நொறுக்கினார். அப்படி சுயநலமின்றி விளையாடிய அவர் இந்தியா ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றினார். அதே அணுகுமுறையை பின்பற்றிய அவருடைய தலைமையில் இந்தியா 2024 டி20 உலகல் கோப்பையை 17 வருடங்கள் கழித்து வென்று சாதனை படைத்தது.

- Advertisement -

இந்நிலையில் 2023 உலகக் கோப்பை முடிந்து 9 மாதங்கள் கழித்தும் ரோஹித் அதே அதிரடியான அணுகுமுறையுடன் விளையாடுவதாக பவுலிங் பயிற்சியாளர் சைரஜ் பஹதுலே பாராட்டியுள்ளார். இந்த அதிரடியை ரோஹித் சர்மா தொடர்ந்து கடைபிடிப்பார் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரோஹித் சர்மாவின் ஆட்டம் அற்புதமாக இருந்தது”

இதையும் படிங்க: 2 சான்ஸ் இருந்தும் இந்தியாவின் வெற்றியை இப்படி கோட்டை விட்டீங்களே அர்ஷ்தீப் தம்பி.. கம்ரான் அக்மல்

“2023 உலகக் கோப்பைக்கு பின் இப்போது தான் அவர் முதல் முறையாக ஒருநாள் போட்டியில் விளையாடுகிறார் என்று நினைக்கிறேன். ஆனால் அதற்கிடையே அவர் பிரேக் எடுத்தது போல தெரியவில்லை. அந்தளவுக்கு அற்புதமாக விளையாடிய அவர் பொறுப்பை எடுத்துக்கொண்டு பேட்டிங் செய்தார். எந்த எதிரணியையும் எந்த வேகப்பந்து வீச்சு அட்டாக்கையும் ரோஹித் தனது அதிரடியான அணுகு முறையை பின்பற்றி எதிர்கொள்கிறார். அவர் தொடர்ந்து இப்படியே விளையாடுவார் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement