ராக்கெட் போன்று இலக்கை சரியாக தாக்கி ஸ்டம்பை தகர்த்த பந்து. சைனியின் மின்னல் வேக யார்க்கர் – வைரலாகும் போல்ட் வீடியோ

Saini

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று கட்டாக் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இறுதிப்போட்டியான இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி தற்போது முதலில் விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 41 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்களை குவித்துள்ளது. இந்த போட்டியில் காயம் காரணமாக விலகிய தீபக் சாகருக்கு பதிலாக நவ்தீப் சைனி அறிமுக வீரராக களமிறங்கினார். சிறப்பாக பந்துவீசி வரும் சைனி தற்போது வரை 7 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

அதிலும் இவர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ரோஸ்டன் சேஸ்க்கு வீசிய ஒரு யார்க்கர் அனைவரையும் வியக்கவைத்தது. போட்டியில் 31-வது ஓவரின் 3-வது பந்தில் அவர் வீசிய இந்த அபாரமான யார்க்கர் ராக்கெட் வேகத்தில் அவரின் கால்களுக்கு இடையில் ஸ்டம்பை தகர்த்தது. இந்த மின்னல் வேக யார்க்கர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி கூறுவதும் குறிப்பிடத்தக்கது.