எல்லைக்கோட்டின் அருகில் பெங்களூரு வீரர் எகிறி பிடித்த கேட்ச் – வைரல் வீடியோ

Saini
- Advertisement -

நேற்றைய போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணி வீரரான குருனால் பாண்டியா உமேஷ் யாதவ் வீசிய 17 ஆவது ஓவரில் லெக் சைடில் மிக உயரமாக தூக்கி அடித்தார். அந்த பந்து எல்லை கோட்டிற்கு அருகே மிக உயரமாக பரந்த பந்தினை பெங்களூரு அணியின் வீரரான சைனி லாவகமாக எகிறி பிடித்தார். இதோ அந்த கேட்ச் வீடியோ :

- Advertisement -

இந்த கேட்ச் வீடியோ தற்போது இணையத்தில் பெங்களூரு அணியின் ரசிகர்களால் வைரலாகி வருகிறது. குருனால் பாண்டியா அவுட் ஆனதும் அவரது தம்பி ஹர்டிக் பாண்டியா அதிரடியாக ஆடி மும்பை அணி பெரிய இலக்கினை அடிக்க உதவியது குறிப்பிடத்தக்கது.

நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல் தொடரின் 7 ஆவது போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், பெங்களூரு அணிக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை குவித்தது. மும்பை அணி சார்பாக ரோஹித் சர்மா 48 ரன்களை குவித்தார். ஹார்டிக் பாண்டியா 14 பந்துகளில் 32 ரன்களை குவித்தார்.

Kohli

பிறகு ஆடிய பெங்களூரு அணிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணையிக்கப்பட்டது. அதன்படி தெடர்ந்து ஆடிய பெங்களூரு அணி 181 ரன்களை குவித்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. டிவில்லியர்ஸ் 41 பந்தில் 70 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி சார்பில் பும்ரா 4 ஓவர்கள் வீசி 20 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகன் விருதினை பெற்றார்.

Advertisement