MS Dhoni : தோனி செய்தது மிகப்பெரிய தவறு. அவர் இப்படி செய்து இருக்க கூடாது – சைமன் டபல்

தோனி கடந்த சில போட்டிகளுக்கு முன்னர் நோபால் ஒன்றிற்காக மைதானத்தில் சென்று நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையாக வெடித்தது. இதில் தோனியின் செயல்பாடு தவறு என்று என்று

Dhoni 1
- Advertisement -

தோனி கடந்த சில போட்டிகளுக்கு முன்னர் நோபால் ஒன்றிற்காக மைதானத்தில் சென்று நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையாக வெடித்தது. இதில் தோனியின் செயல்பாடு தவறு என்று என்று பலரும் விமர்சனங்களை கூறிவந்தனர்.

Dhoni-2

- Advertisement -

இந்நிலையில் நியூசிலாந்து நாட்டை சேர்ந்த நடுவராக சைமன் டபல் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். அதி அவர் கூறியதாவது : தோனி களத்தில் அம்பயரின் முடிவை எதிர்த்து பேசாமல் அம்பயரின் முடிவை சம்மதித்து அமைதியாக சென்றதையே நான் கண்டு இருக்கிறேன்.
ஆனால், தோனியின் இத்தகைய செயலை நான் எதிர்பார்க்க வில்லை.

ஐ.பி.எல் பணம் புழங்கும் தொடர் அதற்காக அழுத்தத்தில் அவர் அதனை செய்தார் என்றே நான் நினைக்கிறன். தோனி முதலில் களத்திற்கு சென்றது தவறு மேலும் அம்பயர்கள் தோனியிடம் அவ்வளவு நேரம் பேசுவதே தவறு. எங்களது முடிவே இறுதி என்று கூறி அனுப்பி வைத்து இருக்கவேண்டும். இப்படி களத்தில் விவாதம் செய்தால் அம்பயர்களின் நிலை கவலைக்குள்ளாகிவிடும்.

Dhoni

தோனியின் வலிமையே அவரின் பொறுமைதான். இந்த விடயத்தில் அவர் தனது பொறுமையை இழந்து நிதானம் தவறி விதியை மீறியதாகவே நான் கருதுகிறேன். நிச்சயம் தோனி செய்தது தவறு என்று சைமன் டபல் கூறினார்.

Advertisement