ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று துவங்கியுள்ளது. அந்த சுற்றின் முதல் போட்டியில் இலங்கை அணியை வங்கதேசம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை 169 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய வங்கதேசம் 19.5 ஓவரில் 169/6 ரன்கள் எடுத்து ஆசிய டி20 கோப்பையில் 7 வருடங்கள் கழித்து இலங்கையை தோற்கடித்து அசத்தியது.
அந்த அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் சாய்ப் ஹசன் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி 61 (45) ரன்கள் விளாசி வெற்றியில் முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார். அவருடன் தவ்ஹீத் ஹ்ரிடாய் தம்முடைய பங்கிற்கு 58 (37) ரன்கள் அடித்து அசத்தினார். கடந்த போட்டியில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்த இலங்கை அணி வங்கதேசம் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற முக்கிய பங்காற்றியது.
அடுத்த டார்கெட் இந்தியா:
ஆனால் தற்போது அந்த அணியையே தோற்கடித்த மகிழ்ச்சியில் வங்கதேச ரசிகர்கள் போட்டியின் முடிவில் இலங்கை ரசிகர்களிடம் பாம்பு நடனமாடியாது வைரலானது. இந்நிலையில் அடுத்தப் போட்டியில் இந்தியாவை தோற்கடிப்பதற்கு தேவையான கவனத்தையும் திட்டத்தையும் வகுத்து வருவதாக சாய்ப் ஹசன் தெரிவித்துள்ளார். எனவே சூப்பர் 4 சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்று வங்கதேசம் ஃபைனலுக்கு செல்லும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஹசன் பேசியது பின்வருமாறு. “ஆம், கண்டிப்பாக இறுதிப் போட்டிக்குச் செல்வோம் என்ற தன்னம்பிக்கை எங்களிடம் இருக்கிறது. இத்தொடருக்கு வருவதற்கு முன்பாக நாங்கள் இறுதிப் போட்டியில் விளையாடுவோம் என்ற தன்னம்பிக்கையுடம் இங்கே வந்தோம். இறுதிப் போட்டிக்கு செல்ல இன்னும் எங்களுக்கு ஒரு படி முன்னே இருக்கிறது”
ஃபைனல் போவோம்:
“அதற்கு முன் 2 போட்டிகள் இருக்கும் நிலையில் நாங்கள் அடுத்தப் போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். கண்டிப்பாக ஒருவர் மிகவும் பெரியதாக கனவு காண வேண்டும். அதை நோக்கி நாங்கள் படிப்படியாக முன்னேறி வருகிறோம். எங்களுடைய மொத்த கவனமும் இந்தியாவுக்கு எதிரான அடுத்தப் போட்டியில் மட்டுமே இருக்கிறது. அந்தப் போட்டிக்கு பின் நாங்கள் மற்றவற்றைப் பார்ப்போம்”
இதையும் படிங்க: டெஸ்ட் போட்டியில் 20 விக்கெட்டையும் எடுக்கனும்னா அவரை அணியில் சேருங்க – அணில் கும்ப்ளே ஆதரவு
“பவர் பிளே ஓவரில் கட்டுப்பாடு இருக்கும். அங்கேயும் நீங்கள் சிறப்பாக விளையாடி அசத்த வேண்டும். அதற்காக குறிப்பிட்ட எதிரணி பவுலர்களை அடிப்பதற்கான திட்டத்தை நாங்கள் அணி மீட்டிங்கில் பேசி வகுப்போம். அதனால் ஒவ்வொரு வீரர்களிடமும் தனிப்பட்ட திட்டங்கள் இருக்கும். அந்தத் திட்டத்திற்கு தகுந்தார் போல் நாங்கள் செயல்பட்டு வெற்றியைப் பெற முயற்சிக்கிறோம்” என்று கூறினார்.



