- Advertisement -
ஐ.பி.எல்

டி20 போட்டிகளில் எல்லோரும் அதிரடியா ஆடுறாங்க.. ஆனா என்னோட பிளான் வேற – சாய் சுதர்சன் பேச்சு

தமிழகத்தை சேர்ந்த இடதுகை ஆட்டக்காரரான சாய் சுதர்சன் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 759 ரன்கள் குவித்து அந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி அசத்தினார். அதிலும் குறிப்பாக கடந்த ஆண்டு 145 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடிய அவரது ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது என பலராலும் பாராட்டப்பட்டது.

என்னுடைய கவனம் இதில் மட்டும் தான் : சாய் சுதர்சன்

இவ்வேளையில் தற்போது 2026 ஐபிஎல் தொடருக்கான பயிற்சிக்காக குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இணைந்து செயல்பட்டு வரும் சாய் சுதர்சன் இந்த பயிற்சியின் இடையே டி20 போட்டிகளில் விளையாடுவது குறித்து சில கருத்துக்களையும் பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

- Advertisement -

டி20 போட்டிகளை பொறுத்தவரை எப்பொழுதுமே அனைவரும் அதிரடியாக விளையாட வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் என்னுடைய கவனம் எல்லாம் நமது ஆட்டத்தில் வெரைட்டி இருக்க வேண்டும் அதுதான் முக்கியம். அதாவது பேட்டிங்கிற்கு சாதகமான மைதானத்தில் அதிரடியாக ஆடுவது இயல்புதான் அந்த வகையில் நானும் ஸ்ட்ரைக் ரேட்டை உயர்த்த முயற்சித்து வருகிறேன்.

இருந்தாலும் மைதானம் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் போது அதனையும் ஏற்றுக்கொண்டு அதற்கு ஏற்றார் போல் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து விளையாட வேண்டும். அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன், வைபவ் சூர்யவன்சி போன்றவர்கள் எல்லாம் அதிரடியான துவக்கத்தை அளித்து அசத்தலாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களை போன்று அதிரடியாக விளையாட நானும் கற்றுக்கொள்ள விருப்பப்படுகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : வான்கடே மைதான ஊழியர்களுக்கு சிறப்பு பரிசை வழங்கிய ஹார்டிக் பாண்டியா – நெகிழவைத்த சம்பவம்

இருந்தாலும் பவுலர்களுக்கும் கொஞ்சம் மரியாதை கொடுக்க வேண்டும் என்பதையும் கணக்கில் கொள்கிறேன். எனக்கு தேவை எல்லாம் நான் ஒரு பெரிய இன்னிங்ஸ் விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அதற்காக சூழ்நிலைக்கு ஏற்றார் போல் விளையாடி வருவதாகவும் சாய் சுதர்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -