தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர இடதுகை ஆட்டக்காரரான சாய் சுதர்சன் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தனது சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதன் காரணமாக கடந்த 2023-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். அப்படி அறிமுகமான அவர் இதுவரை இந்திய அணிக்காக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இரண்டு அரைசதங்களுடன் 127 ரன்கள் குவித்துள்ளார்.
சாய் சுதர்சனுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு :
அது தவிர்த்து கடந்த 2025-ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 2 அரைசதங்களுடன் 302 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை அடுத்த நம்பிக்கை நட்சத்திர வீரராக பார்க்கப்படும் அவர் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக இடம்பெறாமல் இருந்து வருகிறார்.
அதோடு டி20 போட்டிகளில் இன்னும் அவருக்கு இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனாலும் ஐபிஎல் தொடர், உள்ளூர் தொடர் என தனது திறமையை தொடர்ச்சியாக நிரூபித்து வரும் அவர் இந்திய அணியின் அடுத்த நட்சத்திர வீரராக பார்க்கப்படுகிறார்.
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வரும் அவர் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் மத்திய பிரதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டியில் விளையாடியிருந்தார். அந்த போட்டியின் போது விளையாடுகளில் சாய் சுதர்சனுக்கு விழா எலும்பு முறிவு ஏற்பட்டது. அந்த போட்டிக்கு பின்னர் செய்யப்பட்ட பரிசோதனையில் :
அவரது காயம் குணமடைய ஒரு மாத காலம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்கு அவர் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் இந்த விஜய் ஹசாரே தொடரிலும், அடுத்து வரும் ரஞ்சி போட்டி ஆட்டங்களிலும் விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க : சச்சின் மாதிரி திறமை கொண்ட அர்ஜுன்.. சிறந்த வீரராக இப்படி மாத்தி ஆடனும்.. யோக்ராஜ் அட்வைஸ்
மேலும் ஒரு மாத கால ஓய்வுக்கு பின்னர் அவர் மீண்டும் பயிற்சியை தொடங்கினாலும் இயல்பு நிலையை எட்டி முழு உடற்தகுதியை பெற மார்ச் மாதம் வரை ஆகும் என்று தெரிகிறது. இதன் காரணமாக அவர் அடுத்ததாக இந்தியாவில் நடைபெற இருக்கும் 2026 ஐபிஎல் தொடருக்கான குஜராத் அணியில் தான் நேரடியாக இணைவார் என்று தெரிகிறது.



