- Advertisement -
இந்திய கிரிக்கெட்

10 ஃபோர்ஸ்.. சேவாக் போல இங்கிலாந்தில் அசத்திய தமிழக வீரர் சாய் சுதர்சன்.. இந்திய வாய்ப்புக்காக தீயாக ஆட்டம்

தமிழக கிரிக்கெட் வீரர் சாய் சுதர்சன் இந்திய தேசிய அணியில் நிலையான இடத்தை பிடிப்பதற்காக போராடி வருகிறார். டிஎன்பிஎல் தொடரில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் 2023 ஐபிஎல் ஃபைனலில் தோனி தலைமையிலான சென்னை அணியை புரட்டி எடுத்த அவர் ஜாம்பவான் சச்சினின் பாராட்டைப் பெற்றார்.

அதனால் கடந்த 2023 டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அவர் இந்தியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் அரை சதமடித்து அசத்திய சாய் சுதர்சன் 2024 ஐபிஎல் தொடரிலும் சென்னைக்கு எதிராக சதமடித்து மிரட்டினார். அதைத் தொடர்ந்து 2024 துலீப் கோப்பையில் ருதுராஜ் தலைமையிலான சி அணியில் விளையாடுவதற்காக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

இங்கிலாந்தில் அசத்தல்:

அதற்கு முன்பாக இங்கிலாந்து பயணித்துள்ள சாய் சுதர்சன் அங்கு நடைபெறும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சர்ரே அணிக்காக விளையாடி வருகிறார். அதில் சர்ரே மற்றும் நாட்டிங்கம்ஷைர் அணிக்கு எதிரான போட்டி ஆகஸ்ட் 29ஆம் தேதி ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சர்ரே முதல் இன்னிங்ஸில் 525 ரன்கள் குவித்து அசத்தியது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் கேப்டன் ரோரி பர்ன்ஸ் சதமடித்து 161 ரன்களும் ரியான் படேல் 77 ரன்களும் வில் ஜேக்ஸ் 59 ரன்கள் விளாசி அசத்தினார்கள். அவர்களைத் தொடர்ந்து வழக்கத்திற்கு மாறாக மிடில் ஆர்டரில் விளையாடிய சாய் சுதர்சன் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி 10 பவுண்டரி 1 சிக்ஸருடன் சதமடித்து 105 ரன்கள் குவித்தார். குறிப்பாக 98 ரன்களில் இருந்த போது சேவாக் போல சிக்சருடன் சதமடித்த அவர் இங்கிலாந்து மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்து அசத்தினர்.

- Advertisement -

தீயாக சாய் சுதர்சன்:

அவருடைய ஆட்டத்தை பார்த்து மைதானத்தில் இருந்த பெரும்பாலான இங்கிலாந்து ரசிகர்கள் கைதட்டி பாராட்டினர். அவருடன் சர்ரே அணிக்கு ஜோர்டன் கிளார்க் 53 ரன்கள் எடுத்து அசத்திய நிலையில் நாட்டிங்கம் சார்பில் அதிகபட்சமாக பர்ஹான் அஹ்மத் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அந்த வகையில் இங்கிலாந்து மண்ணிலும் தமிழக வீரர் சாய் சுதர்சன் சதமடித்து கால் தடம் பதித்துள்ளார்.

இதையும் படிங்க: 286 ரன்ஸ்.. 8 விக்கெட்ஸ்.. கம்பேக்கில் சூர்யகுமாருக்கு சோகம்.. மிரட்டிய சாய் கிஷோர்.. மும்பையை சுருட்டிய தமிழ்நாடு

மொத்தத்தில் டிஎன்பிஎல், உள்ளூர் தொடர்கள், ஐபிஎல், கவுண்டி என இந்திய வாய்ப்பை பெறுவதற்காக சாய் சுதர்சன் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து தீயாக விளையாடி வருகிறார். அதனால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதை தமிழக ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதைத் தொடர்ந்து 2024 துலீப் கோப்பையில் அதத்தினால் அவருக்கு அடுத்த மாதம் நடைபெறும் வங்கதேச டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கலாம்.

- Advertisement -