சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 56-ஆவது லீக் போட்டியில் விளையாடியிருந்த குஜராத் டைட்டன்ஸ் அணிவானது 82 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தியது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் குவித்தது.
3 ஆவது இந்திய வீரராக சாய் சுதர்சன் நிகழ்த்திய சாதனை :
இந்த போட்டியின் போது குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரரான சாய் சுதர்சன் 44 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என 61 ரன்கள் குவித்து அசத்தினார். அவர் அடித்த இந்த 61 ரன்கள் மூலம் மூன்றாவது இந்திய வீரராக நடப்பு 2026 ஐ.பி.எல் தொடரில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்திய அசத்தியுள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த தொடரில் நேற்று அடித்த 61 ரன்களையும் சேர்த்து அவர் மொத்தம் 502 ரன்களை குவித்துள்ளார். இதன் மூலம் கடந்த 2024, 2025 மற்றும் 2026 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் ஐபிஎல் தொடரில் 500 பிளஸ் ரன்களை அடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
இவருக்கு முன்னதாக ஏற்கனவே ஷிகர் தவான் 2019 முதல் 2021 வரை தொடர்ச்சியாக 500+ பிளஸ் ரன்களை அடித்திருந்தார். அதேபோன்று விராட் கோலி 2023 முதல் 2025 வரை மூன்று முறை தொடர்ச்சியாக 500 + ரன்களை அடித்திருந்தார். இந்த பிரத்யேகமான சாதனை பட்டியலில் தற்போது சாய் சுதர்சனும் சேர்ந்துள்ளார்.
இதையும் படிங்க : 2026 ஐ.பி.எல் தொடரின் முதல் பந்துவீச்சாளராக முகமது சிராஜ் நிகழ்த்திய – அசத்தல் சாதனை
மேலும் இந்த பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல் ராகுல் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக ஐந்து முறை 500 பிளஸ் ரன்களை அடித்து முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.



