வாஷிங்டன் சுந்தர் தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்.. காரணம் இதுதான் – சாய் சுதர்சன் பேட்டி

Sai and Sundar
- Advertisement -

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 759 ரன்கள் குவித்து நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக தமிழக வீரர் சாய் சுதர்சன் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி அசத்தியிருந்தார். அதுமட்டும் இன்றி தமிழ்நாடு அணிக்காகவும் உள்ளூர் போட்டிகளில் அவர் மிகச் சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுகளையும் பெற்று வந்தார்.

வாஷிங்டன் சுந்தர் தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன் : சாய் சுதர்சன்

இதன் காரணமாக தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக துவங்கவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியிலும் அவருக்கு முதல் முறையாக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே நிச்சயமாக அவருக்கு இந்த இங்கிலாந்து தொடரில் டெஸ்ட் போட்டிகளுக்கான அறிமுக வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற வேளையில் இளம் வீரரான சாய் சுதர்சன் நிச்சயம் மூன்றாவது இடத்தில் களமிறங்க வேண்டும் என்று அவருக்கு ஆதரவு குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக பி.சி.சி.ஐ ஏற்பாடு செய்திருந்த ஒரு பிரத்யேக நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சாய் சுதர்சன் சக இந்திய அணியின் வீரரும், தமிழக ஆல்ரவுண்டருமான வாஷிங்டன் சுந்தர்தான் தனக்கு இன்ஸ்பிரேஷன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : வாஷிங்டன் சுந்தர் தான் கிரிக்கெட்டை பொருத்தவரை என்னுடைய இன்ஸ்பிரேஷன். நான் அவருக்கு எதிராக சில போட்டிகளில் விளையாடியுள்ளேன். அது உண்மையிலேயே மிகவும் ஸ்பெஷலான போட்டிகள். வாஷிங்டன் சுந்தர் பயிற்சி செய்வதை சிலமுறை நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அவர் மிக இளம் வயதிலேயே மாநில அணிக்காக விளையாடியது மட்டுமின்றி இந்திய அணிக்காகவும் விளையாடினார்.

- Advertisement -

ஒரு வீரர் இப்படி தேசிய அணிக்காக இவ்வளவு விரைவாக விளையாட முடியுமா? என்பதை பார்த்து நான் ஆச்சரியப்பட்டுள்ளேன். அந்த வகையில் இந்திய அணிக்காக வாஷிங்டன் சுந்தரை போல விரைவில் விளையாட வேண்டும் என்ற எண்ணம் என்னிடமும் இருந்தது. அதனாலேயே வாஷிங்டன் சுந்தரை நான் ஒரு முன்னுதாரணமாக பார்க்கிறேன்.

இதையும் படிங்க : நீங்க இந்தியா வர வேண்டாம்.. அங்கயே இருங்க.. நிறுத்தி வைக்கப்பட்ட ஹர்ஷித் ராணா – காரணம் என்ன?

எனக்கு வாஷிங்டன் சுந்தரை மிகவும் இளம் வயதில் இருந்தே தெரியும். நான் அவருடன் இணைந்தும் விளையாடி இருக்கிறேன். தற்போதும் குஜராத் அணியில் நாங்கள் ஒன்றாக விளையாடி வருவது மகிழ்ச்சி என சாய் சுதர்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement