நீங்க இந்தியா வர வேண்டாம்.. அங்கயே இருங்க.. நிறுத்தி வைக்கப்பட்ட ஹர்ஷித் ராணா – காரணம் என்ன?

Harshit Rana
- Advertisement -

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாலில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் போது இந்திய அணிக்காக அறிமுகமான 23 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா அந்த தொடரின் இரண்டு போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஏற்கனவே இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சற்று சுமாரான செயல்பாட்டை வெளிப்படுத்தியதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது.

இங்கிலாந்திலேயே இருக்குமாறு ஹர்ஷித் ராணாவுக்கு பி.சி.சி.ஐ கட்டளை :

ஆனாலும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு பயிற்சி போட்டிகள் கொண்ட இந்திய ஏ அணியில் இடம் பிடித்திருந்த அவர் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியிருந்தார். இந்த பயிற்சி அமர்விலும் ஹர்ஷித் ராணாவின் செயல்பாடு சுமாராகவே அமைந்திருந்தது.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் இங்கிலாந்து தொடருக்கான இந்திய முதன்மை அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை என்றாலும் அங்கேயே தங்குமாறு பிசிசிஐ அவருக்கு கட்டளை இட்டுள்ளது. இப்படி முதன்மை இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்றாலும் இங்கிலாந்திலேயே அவர் நிறுத்தி வைக்கப்பட என்ன காரணம்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

அந்த வகையில் ஏற்கனவே இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களாக ஜஸ்ப்ரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், ஷர்துல் தாகூர் போன்ற வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் ஒரு சிலர் சிறப்பாக செயல்படாமல் போனாலும் அல்லது இந்த தொடரின் இடையே யாரேனும் காயத்தை சந்தித்தாலோ அவர்களுக்கு பதிலாக மாற்று வீரராக அணிக்குள் கொண்டுவரவே ஹர்ஷித் ராணா அங்கே தங்க வைக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

மேலும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் ஹர்ஷித் ராணாவின் பந்துவீச்சின் மீது அதிகளவு நம்பிக்கை வைத்துள்ளதாலே அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பினை வழங்கி வருகிறார் என்றும் கம்பீரின் வேண்டுகோளின் படியே ஹர்ஷித் ராணா தற்போது அங்கேயே தங்க வைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : பும்ரா இல்ல.. இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியின் மேட்ச் வின்னர் அவர்தான் – மைக்கல் கிளார்க் கருத்து

தற்போது தனது தாயின் உடல்நிலை காரணமாக இந்தியா வந்துள்ள கம்பீர் எப்போது இங்கிலாந்து செல்வார் என்று தெரியவில்லை. ஆனாலும் இந்திய அணியின் வீரர்கள் மற்ற பயிற்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் கீழ் தற்போது தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement