பும்ரா இல்ல.. இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியின் மேட்ச் வின்னர் அவர்தான் – மைக்கல் கிளார்க் கருத்து

Clarke
- Advertisement -

கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழந்த இந்திய அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் முதல் முறையாக தவறவிட்டது. இதன் காரணமாக ஆஸ்திரேலியா தொடர் முடிந்த கையோடு இந்திய டெஸ்ட் அணியின் மீது அதிகளவு விமர்சனங்கள் எழுந்தன.

பும்ரா இல்ல.. இந்திய அணியின் மேட்ச் வின்னர் அவர்தான் : மைக்கல் கிளார்க்

இந்நிலையில் அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியின் முதல் தொடராக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் ஜூன் 20-ஆம் தேதி துவங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற அனுபவ வீரர்கள் இல்லாமல் சுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி களமிறங்குகிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்த தொடரானது இந்திய அணிக்கு சவால் வாய்ந்த தொடராக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தொடராக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் எந்தெந்த வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டனான மைக்கல் கிளார்க் இந்த இங்கிலாந்து தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ராவை காட்டிலும் சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு பவுலர் குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஜஸ்ப்ரீத் பும்ரா மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்க்கு திரும்பி உள்ளது நிச்சயம் இந்திய அணிக்கு பலம் தான்.

- Advertisement -

ஆனால் தற்போதைய சூழலில் அவரைவிட இந்த இங்கிலாந்து தொடரில் குல்தீப் யாதவ் தான் முக்கிய பந்து வீச்சாளராக இருப்பார். ஏனெனில் குல்தீப் யாதவை நான் இந்திய மைதானங்களை விட வெளிநாட்டு மைதானங்களில் சிறப்பான பந்துவீச்சாளர் என்று கருதுகிறேன். இங்கிலாந்து ஆடுகளங்களில் அவர் பந்துவீசுவதை பார்க்க விரும்புகிறேன்.

இதையும் படிங்க : இங்கிலாந்து தொடரில் அசத்தப்போகும் இந்திய போர் குதிரை அவர் தான்.. மறந்துடாதீங்க – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து

அவர் பந்துவீசும் ஸ்டைல் நிச்சயம் வெளிநாட்டு ஆடுகளங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த டெஸ்ட் தொடரில் குல்தீப் யாதவ் விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய ஒரு எக்ஸ்பேக்டர் வீரராகவும், மேட்ச் வின்னராகவும் இருப்பார் என்பதே எனது கருத்து என மைக்கல் கிளார்க் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement