பயந்து தைரியத்தை கைவிடாத கேப்டன் கில்.. அபார கேட்ச்சை ஜோடியாக பிடித்த சாய் ஜடேஜா

IND vs ENG
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. லீட்ஸ் நகரில் ஜூன் 20ஆம் தேதி துவங்கிய அத்தொடரில் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 471 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 101, ரிசப் பண்ட் 134, கேப்டன் 147 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4, ஜோஸ் டாங் 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணியை கடுமையாக போராடி இந்தியா 465 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அதிகபட்சமாக ஓலி போப் 106, ஹரி ப்ரூக் 99, பென் டக்கெட் 62 ரன்கள் எடுத்தார்கள். இந்தியாவுக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகளை எடுத்து 6 ரன்களை முன்னிலையாக பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

பயப்படாத சுப்மன் கில்:

முன்னதாக அந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் சில கேட்ச்களை தவற விட்டு சுமாராக ஃபீல்டிங் செய்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. குறிப்பாக ரவீந்திர ஜடேஜா 2வது நாளில் பென் டக்கெட் 15 ரன்னில் கொடுத்த எளிதான கேட்சை கோட்டை விட்டது ரசிகர்களைக் கடுப்பேற்றியது. அந்த சூழ்நிலையில் லோயர் ஆர்டரில் ஜேமி ஸ்மித் கொஞ்சம் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார்.

பிரசித் கிருஷ்ணா வீசிய 80வது ஓவரின் முதல் ஷார்ட் பிட்ச் பந்தை அவர் ஃபுல் ஷாட் பயன்படுத்தி சிக்ஸர் பறக்க விட்டார். அதை பவுண்டரி எல்லையில் நின்று கொண்டிருந்த ரவீந்திர ஜடேஜாவால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. அதன் காரணமாக அந்த திட்டம் வேலையாகவில்லை என்று நினைத்து கேப்டன் சுப்மன் கில் ஃபீல்டிங்கை மாற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஜோடியாக அபாரம்:

ஆனால் ஒரு சிக்ஸருக்காக பயப்படாத அவர் தைரியமாக அதே ஃபீல்டிங்கை வைத்து பிரசித் கிருஷ்ணாவை மீண்டும் அப்படியே பவுலிங் செய்ய சொன்னார். அதன் பயனாக 3வது பந்தில் மீண்டும் ஜேமி ஸ்மித் சிக்ஸர் அடித்தார். ஆனால் இம்முறை அவர் சரியாக கனெக்ட் செய்து அடிக்கத் தவறியதால் கேட்ச்சை மாறிய பந்தை பௌண்டரி எல்லையில் நின்ற ஜடேஜா லாவகமாக பிடித்தார்.

இதையும் படிங்க: 150 விக்கெட்ஸ்.. 6 ரன்ஸ் லீட்.. வெளிநாட்டின் ஆசிய கில்லியாக முரளிதரனுக்கு நிகராக பும்ரா 2 வரலாற்று சாதனை

அப்போது பேலன்ஸை இழக்கிறோம் என்பதை உணர்ந்த அவர் பந்தை தமது அருகில் ஓடி வந்த சாய் சுதர்சனிடம் தூக்கி போட்டு பவுண்டரிக்குள் சென்றார். அதை சுதர்சன் பிடித்து முடிக்கையில் ஜடேஜாவும் மீண்டும் களத்திற்குள் வந்தார். அந்த வகையில் சாய் – ஜடேஜா ஜோடியாக அபாரமான கேட்ச் பிடித்து ஸ்மித்தை 40 ரன்னில் அவுட்டாக்கினர். கேப்டன் சுப்மன் கில் தைரியத்திற்கு விக்கெட் பரிசாக கிடைத்தது.

Advertisement