அதுல முன்னேறாம 2026 டி20 உ.கோ இந்திய அணிக்கு ஆசைப்படல.. இதை செஞ்சாவே போதும்.. சுதர்சன் பேட்டி

Sai Sudharsan
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் குஜராத்தை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை குவாலிஃபயர் 2 போட்டிக்கு தகுதி பெற்றது. அதனால் குஜராத் அணிக்காக அபாரமாக விளையாடி வந்த சாய் சுதர்சனின் போராட்டமும் நிறைவுக்கு வந்தது. இந்த வருடம் குஜராத்துக்காக ஆரம்பம் முதலே அசத்திய அவர் 15 போட்டிகளில் 759 ரன்கள் குவித்துள்ளார்.

அதன் வாயிலாக விராட் கோலி, சூர்யகுமார் உள்ளிட்ட நட்சத்திரங்களை முந்திய அவர் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். சமீப காலங்களாகவே மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு அடுத்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஐபிஎல் 2025 தொடரில் அதிக ரன்கள் குவித்ததன் காரணமாக அவருக்கு இங்கிலாந்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

2026 டி20 உலகக் கோப்பை:

அதே போல விரைவில் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் அடுத்த வருடம் 2026 டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் பேக்-அப் துவக்க வீரராக சாய் சுதர்சன் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் 2026 உலகக் கோப்பை இந்திய டி20 அணியில் இடம் கிடைக்குமா? என்பதை பற்றி தாம் யோசிக்கவில்லை என்று சாய் சுதர்சன் தெரிவித்துள்ளார். மேலும் டி20 பேட்ஸ்மேனாக இன்னும் தாம் நிறைய முன்னேறிய வேண்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் கிடைக்க உள்ள வாய்ப்பில் சிறப்பாக விளையாட முயற்சிக்க உள்ளதாகவும் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இன்னும் முன்னேறனும்:

அதே சமயம் இந்திய டி20 அணியில் விளையாடும் வாய்ப்புக்காக காத்திருப்பதாகவும் கூறும் சுதர்சன் இது பற்றி பேசியது பின்வருமாறு. “நாட்டுக்காக விளையாடுவது அனைவருடைய கனவாக இருக்கும். நானும் அதை செய்வதற்கு விரும்புகிறேன். ஆனால் தற்சமயத்தில் நான் டி20 உலகக் கோப்பை பற்றிய கோடுகளை நினைக்கவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரைப் பார்க்கும் போது ஒரு டி20 பேட்ஸ்மேனாக நான் முன்னேறுவதற்கு இன்னும் நிறைய இடங்கள் இருக்கின்றது”

இதையும் படிங்க: 204 ரன்ஸ்.. கருண் நாயர் இரட்டை சதம்.. நிஜமாகும் 8 வருட இந்திய அணி கனவு.. ஜுரேல் அசத்தல்

“டி20 கிரிக்கெட்டுக்கு நான் மீண்டும் திரும்புவதற்கு முன்பாக இன்னும் வேலை செய்ய வேண்டிய அம்சங்கள் நிறைய இருக்கின்றன. அதில் தான் தற்போது என்னுடைய கவனம் இருக்கிறது. அதே சமயம் கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும் போது என்னுடைய நாட்டுக்காக நான் சிறந்த செயல்பாடுகளைக் கொடுப்பேன்” என்று கூறினார்.

Advertisement