
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 2ஆம் தேதி அகமதாபாத் நகரில் 51வது கோட்டி இரவு 7.30 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஹைதராபாத் டாஸ் வென்று குஜராத்துக்கு எதிராக முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய குஜராத்துக்கு சாய் சுதர்சன் – கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் ஆரம்பத்திலேயே அதிரடி காட்டினர்.
அதிலும் ஷமி வீசிய 3வது ஓவரில் தமிழக வீரர் சாய் சுதர்சன் 4, 0 4, 4, 4, 4 என 5 பவுண்டரிகளை தெறிக்க விட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். அந்த வகையில் அபாரமாக விளையாடிய அந்த ஜோடியால் 6 ஓவரிலேயே குஜராத் 82/0 ரன்களை எடுத்தது. அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் குஜராத் தங்களுடைய அதிகபட்ச பவர் பிளே ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது.
இதற்கு முன் லக்னோவுக்கு எதிராக 2023இல் 78/0 ரன்கள் அடித்ததே குஜராத்தின் முந்தைய அதிகபட்ச பவர் பிளே ஸ்கோராகும். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அந்த ஜோடியில் அரை சதத்தை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்சன் 48 (23) ரன்னில் ஜீசன் அன்சாரி வேகத்தில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் அசத்திய கில் அரை சதத்தை அடித்தார்.
அவருடன் ஜோடி சேர்ந்த ஜோஸ் பட்லர் தமது ஸ்டைலில் அதிரடியாக விளையாடினார். அந்த வகையில் 2வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் 76 (38) ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட்டானார். அவருக்குப் பின் அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் அரை சதத்தை அடித்து 64 (37) ரன்னில் கமின்ஸ் வேகத்தில் அவுட்டானார்.
இறுதியில் வாஷிங்டன் சுந்தர் 21 (16) ஷாருக்கான் 6, திவாட்டியா 6 ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் குஜராத் 22/6 ரன்களை குவித்தது. ஹைதராபாத் அணிக்கு அதிகபட்சமாக ஜெய்தேவ் உனட்கட் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இதைத்தொடர்ந்து 225 ரன்களை ஹைதெராபாத் துரத்துகிறது.
இதையும் படிங்க: அந்த டீம்ல இருக்கும் 11 பேரும் மேட்ச் வின்னர் தான்.. அவங்களுக்கு தான் ஐ.பி.எல் கப் – ஹர்பஜன் சிங் கருத்து
முன்னதாக இந்தப் போட்டியில் அடித்த 48 ரன்களையும் சேர்த்து சாய் சுதர்சன் ஐபிஎல், டிஎன்பிஎல் உட்பட அனைத்து விதமான டி20 கிரிக்கெட்டில் 54 இன்னிங்ஸில் 2000 ரன்கள் கடந்துள்ளார். இதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் வேகமாக 2000 ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சாதனையை உடைத்துள்ள சுதர்சன் புதிய சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. சாய் சுதர்சன்: 54*
2. சச்சின் டெண்டுல்கர்: 59
3. ருதுராஜ் கெய்க்வாட்: 60
4. ரஜத் படிதார்/தேவ்தூத் படிக்கல்: தலா 61