தோனிக்கு வலைப்பயிற்சியில் பந்துவீசிய சென்னை வீரரை ஏலத்தில் எடுத்த சி.எஸ்.கே நிர்வாகம் – விவரம் இதோ

Kishore-2

இந்தியாவில் அடுத்த ஆண்டு 2020 ஐ.பி.எல் கோப்பைக்கான வீரர்களின் ஏலம் நேற்று 19 ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சுமார் 971 வீரர்கள் ஏலம் விட பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் அதில் 332 பேர் மட்டுமே ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த ஐபிஎல் ஏலத்தில் மொத்தம் 8 அணிகளின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

kishore 1

ஏலத்தில் சென்னை அணி சாம் குரான், பியூஸ் சாவ்லா மற்றும் ஹாசல்வுட் ஆகியோரை ஏலத்தில் எடுத்தது. இதில் சாவ்லா சென்னை அணிக்கு தேவையில்லாத தேர்வு என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் 20 லட்சம் என்ற அடிப்படை விலை கொண்ட சென்னை வீரரை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.

அதன்படி 23 வயது தமிழக வீரரான சாய் கிஷோரை சென்னை அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்தது அனைவர்க்கும் ஆச்சரியம் அளித்தது. தற்போது சாய் கிஷோர் குறித்த சுவாரஷ்ய தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அணிக்காக விளையாடி வரும் சாய் கிஷோர் விஜய் ஹசாரே டிராபி மற்றும் சையத் முஷ்டாக் தொடரில் விளையாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

kishore

அதன்படி கடந்த 2018 ஆம் ஆண்டு சி.எஸ்.கே அணி வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது சாய் கிஷோர் தோனிக்கு பந்து வீசியுள்ளார். மேலும் தோனி அவரது பந்து வீச்சை பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் வலைப்பயிற்சியில் தோனி எனது பந்துவீச்சை சிதறடித்தார் என்று சாய் கிஷோர் அப்போது தெரிவித்திருந்தார்.

- Advertisement -