அஹ்மதாபாத்தில் அசத்திய 2 தமிழக வீரர்கள்.. ராகுலை முந்தி சுதர்சன் 2 சாதனை.. ரசித் கானை மிஞ்சிய கிசோர்

Sai Kishore
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 25ஆம் தேதி நடைபெற்ற ஐந்தாவது லீக் போட்டியில் குஜராத் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பஞ்சாப் 244 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக ப்ரியன்ஸ் ஆர்யா 47, சசாங் சிங் 44*, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 97* ரன்கள் எடுத்தனர்.

குஜராத் அணிக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய குஜராத் 20 ஓவரில் கடுமையாக போராடியும் 232-5 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 74, கேப்டன் சுப்மன் கில் 33, ஜோஸ் பட்லர் 54, ரூதர்போர்ட் 46 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

அசத்திய தமிழர்கள்:

பஞ்சாப் அணிக்கு அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். மறுபுறம் குஜராத் அணி சொந்த மண்ணில் போராடித் தோல்வியை சந்தித்தது. முன்னதாக இந்தப் போட்டியில் இரு அணிகளும் சேர்ந்து 475 ரன்கள் அடிக்கும் அளவுக்கு அகமதாபாத் மைதானம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்தது. அப்படிப்பட்ட பிட்ச்சில் இரு அணிகளுக்காக மொத்தம் 13 பவுலர்கள் பவுலிங் செய்தனர்.

அந்த 13 பவுலர்களில் குஜராத் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் ஹாய் கிஷோர் மட்டுமே 9க்கும் குறைவான எக்கனாமியில் பவுலிங் செய்தார். குறிப்பாக உலகின் நம்பர் ஒன் டி20 ஸ்பின்னராக கருதப்படும் ரசித் கான் இந்தப் போட்டியில் 4 ஓவரில் 48 ரன்களை 12.00 எக்கனாமியில் வழங்கி சுமாராக பவுலிங் செய்தார்.

- Advertisement -

அசத்தல் சாதனை:

ஆனால் அதே 4 ஓவரில் 30 ரன்கள் மட்டுமே கொடுத்த சாய் கிஷோர் 7.50 என்ற சிறப்பான எக்கனாமியில் 3 முக்கிய விக்கட்டுகளை எடுத்து ரசித் கானை மிஞ்சும் வகையில் அசத்தினர். அதே போல பேட்டிங் செய்கையில் மற்றொரு தமிழகத்தின் வீரர் சாய் சுதர்சன் 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 74 (41) ரன்கள் குவித்து குஜராத்துக்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்தார்.

இதையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் இதுவரை அவர் 26 போட்டிகளில் 1108 ரன்களை 48.17 என்ற சராசரியில் குவித்துள்ளார். இதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் குறைந்தது 1000 ரன்கள் அடித்த வீரர்களில் அதிக சராசரியைக் கொண்ட பேட்ஸ்மேன் என்ற சாதனையை சுதர்சன் படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. சாய் சுதர்சன்: 48.17
2. கேஎல் ராகுல்: 45.46
3. ருதுராஜ் கெய்க்வாட்: 41.94

இதையும் படிங்க: 15 ஓவர் பெஞ்சில் உட்காந்திருந்த அவர் திடீர்னு வந்து வெற்றியை பறிச்சுட்டாரு.. தோல்விக்கான 2 காரணம் பற்றி கில்

மேலும் ஐபிஎல் தொடரில் 26 போட்டிகளுக்கு பின் இரண்டாவது அதிக ரன்கள் (1108) எடுத்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் லெண்டில் சிம்மன்ஸ் 1068 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை. முதலிடத்தில் ஷான் மார்ஷ் 1175 ரன்களுடன் உள்ளார்.

Advertisement