அவங்கள அவ்ளோ சீக்கிரம் ஜெயிக்க விடமாட்டோம்.. இந்திய அணியை எச்சரித்த – பாகிஸ்தான் வீரர்

Sahibzada Farhan
- Advertisement -

நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐசிசி-யின் பத்தாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் தற்போது அடுத்தடுத்து நடைபெற்று வரும் வேளையில் இந்த டி20 உலக கோப்பை தொடரின் மிகப்பெரிய போட்டியான இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் பிப்ரவரி 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்திய அணியை ஈஸியா ஜெயிக்க விடமாட்டோம் : பாகிஸ்தான் வீரர்

ஏற்கனவே இந்திய அணிக்கு எதிரான இந்த லீக் போட்டியில் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்த வேளையில் தற்போது ஐசிசி-யுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்திய அணிக்கு எதிராக விளையாட சம்மதம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

நடப்பு சாம்பியனாக இந்த தொடரில் பங்கேற்றிருக்கும் இந்திய அணி பலமான அணியாக இருப்பதாலும் பாகிஸ்தான் அணி சற்று சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாலும் இந்திய அணியே இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை எளிதாக வெல்லும் என்று பலரும் கூறி வருகின்றனர். முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி கூட இந்த போட்டி ஒருதலைபட்சமாக அமையும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிராக மோதும் போட்டியில் அவர்களை எளிதில் ஜெயிக்க விடமாட்டோம் என்றும் மற்ற போட்டிகளை போலவே இந்திய அணிக்கெதிரான போட்டியில் நாங்கள் விளையாட இருக்கிறோம் என பாகிஸ்தான் அணியின் துவக்க வீரரான ஃபர்ஹான் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் மிகப்பெரிய ஆட்டம்.. அதுல ஜெயிக்கப்போவது இவங்கதான் – சவுரவ் கங்குலி கருத்து

இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றெல்லாம் நாங்கள் பெரிதாக எதையும் நினைக்க மாட்டோம். எங்களுக்கு மற்ற போட்டிகளைப் போன்று இதுவும் ஒரு சாதாரண போட்டி. ஆனால் இந்த போட்டியில் அவ்வளவு எளிதாக இந்திய அணியை வெற்றி பெற விடமாட்டோம். இந்த போட்டி ஒரு தலைபட்சமாக இருக்காது எனவும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement