மிரட்டல் விடுத்த பத்திரிகையாளரின் பெயரை வெளியில் சொல்லாமல் இருக்க இதுதான் காரணம் – சாஹா விளக்கம்

Saha
- Advertisement -

இந்திய அணியின் அனுபவ விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருத்திமான் சாஹா தோனி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த பின்னர் தொடர்ந்து டெஸ்ட் அணிக்காக விளையாடி வந்தார். இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாகவே ரிஷப் பண்டின் முன்னேற்றம் காரணமாக அவ்வப்போதுதான் சாஹாவிற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைத்து வருகிறது. இருப்பினும் இன்றளவும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பருக்கான இடத்தில் அவரது பெயரும் பரிசீலிக்கப்படும்.

Saha-1

- Advertisement -

ஆனால் நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு பின்னர் தற்போது வெளியாகியுள்ள இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதன் காரணமாக அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கடினம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பத்திரிகையாளர் ஒருவர் தனக்கு வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் விடுத்ததாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் ஒரு ஸ்க்ரீன் ஷாட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். மேலும் இந்திய கிரிக்கெட் அணிக்காக நான் உழைப்பதற்கு கிடைத்த பரிசுதான் இது என்றும் தனது வருத்தத்தை அவர் தெரிவித்திருந்தார்.

saha

அதன்பின்பு அவருக்கு ஆதரவாக இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சேவாக், ஹர்பஜன் மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். மேலும் சாஹாவிற்கு இந்தியா முழுவதும் ரசிகர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகியது. இந்நிலையில் அவருக்கு மிரட்டல் விடுத்த பத்திரிகையாளரின் பெயரையும் பகிருமாறு அனைவரும் கேட்டுக் கொண்டனர்.

- Advertisement -

ஆனால் இதுவரை அந்த பத்திரிக்கையாளரின் பெயரை அவர் வெளியில் சொல்லவில்லை இது குறித்து அவர் சரியான விளக்கத்தையும் தற்போது தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பிசிசிஐ தரப்பில் இருந்து இதுவரை யாரும் என்னை தொடர்பு கொண்டு இந்த விடயம் குறித்து கேட்கவில்லை. மேலும் எனக்கு மிரட்டல் விடுத்த பத்திரிகையாளர் பெயரை அவர்கள் தெரிவிக்குமாறு சொன்னால் நான் நிச்சயம் அதை செய்வேன்.

இதையும் படிங்க : இதெல்லாம் நியாயமே இல்ல. அவங்கள எதுக்கு டீம்ல இருந்து தூக்குனீங்க – அஜய் ஜடேஜா காட்டம்

ஒருவரை பொதுவெளியில் குற்றம்சாட்டி அவரின் கரியரை நாசம் செய்வது என்பது என் விருப்பமல்ல. அதனால்தான் இன்றுவரை நான் அவரது பெயரை வெளியில் சொல்லவில்லை. மேலும் ட்விட்டர் பதிவிலும் பகிரவில்லை. எந்த ஒரு கிரிக்கெட் வீரருக்கும் எனக்கு நடந்தது போன்று நடக்க கூடாது என்று சாஹா சொல்லியுள்ளார்.

Advertisement