இவங்க மட்டும் இல்லாம ஐ.பி.எல் தொடர் நடந்தா அது சையத் முஷ்டாக் அலி தொடர் மாதிரி இருக்கும் – சஹா ஓபன்டாக்

Saha
- Advertisement -

கொரானா பரவலின் காரணமாக பாதியிலியே நிறுத்தப்பட்டு, காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது, ஐபிஎல்லின் மீதமிருக்கும் 31 போட்டிகளை செப்டம்பர் மாத இறுதியில் ஐக்கிய அமீரகம் அல்லது இங்கிலாந்து நாட்டில் நடத்த பிசிசிஐ திட்டம் வகுத்திருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. ஐபிஎல்லில் எஞ்சியிருக்கும் 31 போட்டிகளும் நடைபெறாமல் போனால் பிசிசிஐக்கு சுமார் 2500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்பதால் எப்படியாவது இந்த ஆண்டே மீதமிருக்கும் போட்டிகளை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பிசிசிஐ.

IPL

- Advertisement -

இதற்கிடையில் எஞ்சியிருக்கும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றால், இங்கிலாந்து அணி வீரர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்று அறிவித்திருக்கிறார் அந்த அணி நிர்வாகத்தின் இயக்குனரான ஆஷ்லே கைல்ஸ். மேலும் செப்டம்பர் மாதத்தில் அனைத்து நாட்டு அணிகளும் சர்வதேச தொடர்களில் கலந்து கொள்ளவிருப்பதால், எஞ்சியிருக்கும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடைபெற்றால் வெளிநாட்டு வீரர்கள் அந்த ஐபிஎல் தொடரில் கலந்து கொள்வார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையில் தனியார் விளையாட்டு இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரரான விருத்திமான் சாஹா கூறுகையில் :

ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெற்றால், அதில் பெரும்பாலான ஆஸ்திரேலிய, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றே எனக்கு தோன்றுகிறது. வெளிநாட்டு வீரர்கள் இல்லாத ஐபிஎல் தொடரானது, சையத் முஷ்டாக் அலி தொடரின் மேம்படுத்தப்பட்ட ஒரு வகையாகத்தான் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். இந்தியாவில் 2006 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சையத் முஷ்டாக் அலி தொடரானது ஐபிஎல்லைப் போலவே இருபது ஓவர்கள் கொண்ட தொடராகும்.

Saha 2

ஆண்டுதோறும் மாநிலங்களுக்கு இடையே நடைபெறும் இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய பல இளம் வீரர்கள் ஐபிஎல் தொடரிலும், இந்திய அணயிலும் இடம்பெற்று வருகின்றனர். முதல் சையத் முஷ்டாக் அலி தொடரை கைப்பற்றிய தமிழ்நாடு அணிதான், இந்த ஆண்டு நடைபெற்று முடிந்திருக்கும் கடைசி தொடரிலும் கோப்பையை கைப்பற்றியிருக்கிறது. அந்த பேட்டியில் மேலும் பேசிய சாஹா, ஐபிஎல் அணி நிர்வாகங்கள் ஒரு வீரருக்கு குறைந்த பட்சம் நான்கு அல்லது ஐந்து போட்டிகளிலாவது விளையாட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

saha

ஒரு வீரர் இரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால், அவரை உடனடியாக அணியில் இருந்து நீக்கி விடுகின்றனர். இது எங்களுடைய அணியில் மட்டுமல்ல அனைத்து அணிகளிலும் நடைபெறக்கூடிய ஒன்றுதான் என்று அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரின்போது கொரானா பாதித்த வீரர்களில் விருத்திமான் சாஹாவும் ஒருவர். தற்போது அவர் உடல் நிலை தேறிவந்து இங்கிலாந்து செல்லும் இந்திய அணியுடன் பயோ பபுளில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement