டீம் செலக்டரே போன் பண்ணி கூப்பிட்டும் துலீப் டிராபியில் விளையாட மறுத்த விரிதிமான் சாஹா – என்ன நல்ல மனசுயா உனக்கு

Saha
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 16-வது ஐபிஎல் தொடரினை அடுத்து தற்போது பிசிசிஐ நடத்திவரும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்க உள்ளன. அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான துலீப் டிராபி வரும் 28-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த துலீப் டிராபியில் பங்கேற்று சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் எனவே இந்த துலீப் கோப்பையில் விளையாட அனைவரும் தங்களது வாய்ப்புக்காக ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்.

saha

- Advertisement -

இவ்வேளையில் இந்த துலீப் டிராபி தொடரில் விளையாட மாட்டேன் என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விரிதிமான் சஹா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பேசிய திரிபுரா அணியின் தேர்வாளர் ஜெயந்தா கூறுகையில் : நான் விரிதிமான் சஹாவிற்கு தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு துலீப் டிராபியில் விளையாடுமாறு அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர் என்னுடைய அழைப்பை மறுத்துவிட்டார். ஏனெனில் இப்படி நடைபெறும் இந்த முதல்தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினால் இந்திய அணிக்கு தேர்வாக கூட ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

saha 1

எனவே இனி நான் இந்த துலீப் டிராபியில் விளையாடி இந்திய அணிக்காக விளையாடப் போவதில்லை. இந்திய அணியில் என்னுடைய வாய்ப்பு முடிந்துவிட்டது. அதனால் எனது இடத்தில் வேறு ஒரு இளம்வீரர் விளையாடட்டும். அவர்களுக்கு எனது இடம் அடுத்த கட்டத்திற்கு செல்ல உதவியாக இருக்கும் என்று கூறி தனது வாய்ப்பை மறுத்துள்ளார் என ஜெயந்தா கூறினார்.

- Advertisement -

இந்திய அணியின் அனுபவ வீரராக விரிதிமான் சஹா (38 வயது) 40 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். அதுமட்டும் இன்றி 9 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். அதேபோன்று ஐபிஎல் 2008 ஆம் ஆண்டு ஆரம்பித்து இதுவரை 171 போட்டியில் விளையாடி உள்ளார்.

இதையும் படிங்க : என் மேல எந்த தப்புமே இல்ல அதுக்கு சாட்சி அது தான், விராட் கோலியுடன் சண்டை போட்டதற்கான – பின்னணியை பகிர்ந்த நவீன்

இப்படி அனுபவம் வாய்ந்த அவர் இனி தனக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதை விட அந்த இடம் ஒரு இளம்வீரருக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து அவர் செய்த செயல் அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement