என் மேல எந்த தப்புமே இல்ல அதுக்கு சாட்சி அது தான், விராட் கோலியுடன் சண்டை போட்டதற்கான – பின்னணியை பகிர்ந்த நவீன்

Naveen-ul-Haq
- Advertisement -

கோடைகாலத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து நிறைவு பெற்ற ஐபிஎல் 2023 டி20 தொடரில் மே 1ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்காக விளையாடிய ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் மற்றும் பெங்களூருக்காக விளையாடிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஆகியோருக்கிடையே மெகா சண்டை ஏற்பட்டது. அந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் வெள்ளைக் கோட்டுக்கு உள்ளே இருந்தும் முகமது சிராஜ் ரன் அவுட் செய்ய முயற்சித்ததால் அதிருப்தியடைந்த நவீன்-உல்-ஹக் அடுத்த சில ஓவர்களில் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அமித் மிஸ்ரா மற்றும் நடுவர்கள் தடுத்தனர்.

Naveen Ul Haq Fight

- Advertisement -

அந்த நிலையில் போட்டி முடிந்ததும் கை கொடுத்துக் கொண்ட போது மீண்டும் அந்த இருவருக்கும் ஏற்பட்ட சண்டையை கிளன் மேக்ஸ்வெல் தடுத்து நிறுத்தினார். அந்த சண்டைகளை பெவிலியனிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் பயிற்சியாளராக இருந்து அதை விலக்காமல் விராட் கோலியுடன் நெஞ்சோடு நெஞ்சாக மோதும் அளவுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். குறிப்பாக ஒரே மாநிலத்தில் பிறந்து இந்தியாவுக்காக விளையாடியும் 2013ஆம் ஆண்டு கொல்கத்தா அணியின் கேப்டனாக சண்டை போட்ட அவர் 10 வருடங்கள் கழித்து லக்னோ அணியின் பயிற்சியாளராக பகையை மறக்காமல் விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது.

என் மேல தப்பு இல்ல:
இறுதியில் கேப்டன் கேஎல் ராகுல் பேசியதால் பகையை மறந்து விராட் கோலி கை கொடுத்த போது பேசுவதற்கு எதுவுமில்லை என்ற வகையில் நவீன் திமிராக சென்றது இந்திய ரசிகர்களை கடுப்பாக வைத்தது. அப்படி பல கோடி ரசிகர்கள் பார்க்கிறார்கள் என்பதை மறந்து சண்டையில் ஈடுபட்ட விராட் கோலி மற்றும் கம்பீர் ஆகியோருக்கு 100% போட்டி சம்பளத்திலிருந்து அபராதமும் நவீனுக்கு 50% அபராதமும் விதிக்கப்பட்டது. அதை விட அந்த தருணத்திற்கு பின்பும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த 3 பேருமே மோதிக்கொண்ட நிலையில் நவீனுக்கும் கம்பீருக்கும் எதிராக ஹைதராபாத், கொல்கத்தா ரசிகர்கள் விராட் கோலியின் பெயரை உச்சரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

Naveen Ul Haq

அத்துடன் மாம்பழம் சுவைத்துக் கொண்டே விராட் கோலி அவுட்டானதை பார்ப்பதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்த நவீன் பெங்களூரு வெளியேறிய போது பிரபல ஆப்பிரிக்கன் செய்தியாளர் சிரித்ததை பதிவு செய்து கலாய்த்தார். இறுதியில் லக்னோ தோற்று வெளியேறிய போது அதே மாம்பழத்தை வைத்து மும்பை வீரர்கள் அவருக்கு தக்க பதிலடி கொடுத்து நாட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அந்த போட்டியில் விராட் கோலி தான் முதலாவதாக அத்துமீறிய வார்த்தைகளை பேசி சண்டையை துவங்கியதாக தெரிவிக்கும் நவீன் நடுவர்கள் விதித்த அபராத தொகை தான் அதற்கு ஆதாரம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் தம் மீது எந்த தவறும் இல்லை என்று கூறும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்ருமாறு. “அந்தப் போட்டியின் போதும் போட்டிக்குப் பின்பும் அவர் அப்படியெல்லாம் சொல்லியிருக்கக் கூடாது. அந்த வகையில் நான் சண்டையை தொடங்கவில்லை. குறிப்பாக போட்டி முடிந்ததும் வழக்கம் போல நாங்கள் கைகுலுக்கி கொண்ட போது விராட் கோலி தான் சண்டையை துவங்கினார். அதற்காக நடுவர்கள் வழங்கிய அபராதத்தை நீங்கள் பார்க்கும் போது யார் முதலில் சண்டையை துவக்கினார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம்”

“இந்த சமயத்தில் நான் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பொதுவாக நான் யாரையும் ஸ்லெட்ஜிங் செய்வதில்லை. அப்படியே நான் செய்தாலும் அதை பவுலிங் வீசும் போது ஒரு பவுலராக மட்டுமே பேட்ஸ்மேன்களுக்கு எதிராக செய்வேன். அப்படிப்பட்ட நிலையில் அந்தப் போட்டியில் நான் ஒரு வார்த்தையை கூட மோசமாக பயன்படுத்தவில்லை. நான் யாரையும் ஸ்லெட்ஜிங் செய்யவில்லை. மேலும் அங்கிருந்த வீரர்களுக்கு அந்த சூழ்நிலையை நான் எப்படி சமாளித்தேன் என்பதை நன்றாக தெரியும்”

இதையும் படிங்க:TNPL 2023 : ஆரம்பத்திலேயே டாப்பராக மிரட்டும் நடப்பு சாம்பியன் சேப்பாக்- திருப்பூரை அசால்ட்டாக ஊதி தள்ளியது எப்படி?

“குறிப்பாக பேட்டிங் செய்த போதும் அதன் பின்பும் நான் என்னுடைய பொறுமையை இழக்கவில்லை. மேலும் போட்டி முடிந்த பின்பு நான் என்ன செய்தேன் என்பதை அனைவரும் பார்த்தனர். அதை விட வீரர்கள் கை கொடுத்துக் கொள்ளும் போது விராட் கோலி என்னுடைய கையை மிகவும் அழுத்தமாக பிடித்தார். அதனால் நானும் மனிதன் என்பதால் ரியாக்சன் செய்தேன்” என்று கூறினார்.

Advertisement