இருந்த பிரச்சனை ஓவர். இந்திய அணியுடன் இணையவுள்ள நட்சத்திர வீரர் – வெளியான நற்செய்தி

Saha-3
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றிற்கான, 20 பேர் கொண்ட இந்திய அணி கடந்த 7ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ஐபிஎல் தொடரின்போது கொரானா தொற்று பாதித்த வீரர்களான விருத்திமான் சாஹா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். சில நாட்களுக்கு முன் சாஹாவிற்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கொரனா தொற்று சரியாகவில்லை என்று தெரிந்தது. அதைத் தொடர்ந்து அவர் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் இடம்பிடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது.

- Advertisement -

இதற்கிடையில் தற்போது மீண்டும் விருதிமான் சாஹாவிற்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரனா தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளதால், அவர் இங்கிலாந்து செல்லும் இந்திய அணியுடன் இணைவது உறுதியாகியுள்ளது. டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் இரண்டு வாரங்களாக தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த விருதிமான் சாஹாவிற்கு உடல்நிலை சரியான காரணத்தினால், அவர் தற்போது கொல்கத்தாவில் உள்ள தனது குடும்பத்தை சந்திக்க செல்லவிருக்கிறார்.

மேலும் அவர், இந்திய அணி இங்கிலாந்து புறப்படுவதற்கு முன் உள்ள ஒரு வார காலத்தில், வீரர்களுக்கான பயோ பபுளில் இணைவார் என்றும் அதிகாரப் பூர்வ அறிக்கை வந்துள்ளது. இங்கிலாந்து செல்லும் இந்திய டெஸ்ட் அணியில், இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அதில் ரிஷப் பன்ட் நல்ல உடல் நிலையில் இருந்தபோதும் மற்றொரு கீப்பரான, சாஹா உடல் நலம் பெறாமல் இருந்தது இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தது. தற்போது அவரும் குணமடைந்து விட்டதால், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இடத்திற்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.

saha 2

இந்திய டெஸ்ட் அணியில் உடல் நிலை தேறி வந்தால்தான் இடம் பிடிக்க முடியும் என்ற கட்டாயத்தில் இருக்கும் மற்ற இரு வீரர்களான, கே எல் ராகுல் மற்றும் பிரசித் கிருஷ்னா ஆகியோரில், கே.எல் ராகுல் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளதால், அவரும் நிச்சயமாக இந்திய அணியுடன் இங்கிலாந்து செல்வார். ஆனால் மற்றொரு வீரரான பிரசித் கிருஷ்ணாவின் நிலை என்னவென்று இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. எனவே அவர் இந்திய அணியுடன் இணைவாரா? மாட்டாரா? என்பது இன்னும் கேள்விக்குறியதாகவே இருக்கிறது.

இந்த மாத கடைசியில் இங்கிலாந்து செல்லவிருக்கும் இந்திய அணி, ஜூன் மாதம் 18 ஆம் தேதி நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் போட்டி ஜூன் மாதம் 22ஆம் தேதி முடிவடைகிறது. அதற்கடுத்து அக்டோபர் மாதம், இங்கிலாந்து அணியுடனான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த தொடரானது செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் முடிவடைய இருப்பதால், இந்திய வீரர்களுக்கு இது மிக நீண்ட சுற்றுப் பயணமாக அமைந்திருக்கிறது. எனவே வீரர்கள் தங்களுடைய குடும்பத்தையும் உடன் அழைத்துச் செல்ல அனுமதி அளித்துள்ளது பிசிசிஐ.

Advertisement