பிங்க் பால் டெஸ்டில் காயமடைந்து அறுவை சிகிச்சை செய்துகொண்ட இந்திய வீரர் – விவரம் இதோ

Saha-3

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விருதிமான் சஹா இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கலந்துகொண்டு விளையாடியபோது அவர் கைவிரலில் உட்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் தற்போது அவருக்கு மும்பை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

saha 1

போட்டியின் பாதியிலே காயம் ஏற்பட்டாலும் பாதியில் வெளியேறாமல் போட்டியை வெற்றிகரமாக விளையாடி முடித்த சஹா முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதற்கு பின்னர் நடந்த மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சிறிய அளவிலான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பது அவசியமானது.

எனவே அதனை அடுத்து தற்போது மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சஹாவிற்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடத்தி முடிக்கப்பட்டது. இது குறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் : பிசிசிஐ அமைப்பின் மருத்துவக் குழுவின் ஆலோசனைப்படி விருத்திமான் சஹா விற்கு கை விரல்களில் எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார். மேலும் மீண்டும் தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி பெற இருக்கிறார் என்றும் தெரிவித்தது.

saha 2

மேலும் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளதாக இதற்கு முன்னர் வாரா என்ற கேள்விக்கும் பிசிசிஐ பதிலளிக்கிறது கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களே உள்ளதால் அதற்குள் தனது காயத்தில் இருந்து முழுமையாக மீண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது சமீபத்தில்தான் கடந்த வாரம் போட்டியின் போது சாட்சிகளை பிடித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது

- Advertisement -